ஒலிச்சேர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பிலும்]], நிகழ்படத் தயாரிப்பிலும், '''ஒலிச்சேர்க்கை''' (Dubbing) என்பது, [[படப்பிடிப்பு]]க்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதலில் செய்த [[ஒலிப்பதிவு]]க்குக் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, [[தன்னியக்க உரையாடல் மாற்றீடுபதிலீடு]] அல்லது கூடுதல் உரையாடல் பதிவு என்பதையும் உள்ளடக்குகிறது. இச்செயல்முறையின் போது, படத்தில் நடித்த நடிகர்களின் உரையாடல்களை மீள்பதிவு செய்கின்றனர். [[இசை]] பெரும்பாலும் ஒலிச்சேர்க்கை மூலமே [[திரைப்படம்|திரைப்படத்தில்]] இணைக்கப்படுகின்றது. திரைப்படத்தில் நடித்த [[நடிகர்]]களுக்குப் பதிலாக இன்னொருவர் அதே [[மொழி]]யில் குரல் கொடுப்பதும், திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யும்போது நடிகர்களுக்குப் பிற மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பதும் ஒலிச்சேர்க்கையுள் அடங்குவதே.
 
==தோற்றம்==
முற்காலத்தில் படத்தில் நடிக்கும் நடிகருக்கும் பாடும் குரல் வளம் இல்லாதபோது பாடல்களை வேறொருவர் மூலம் பாடி இணைப்பதற்கே ஒலிச்சேர்க்கை பெரிதும் பயன்பட்டது. தற்காலத்தில், பல்வேறு தேவைகளுக்கு ஒலிச்சேர்க்கை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஒலி-ஒளித் தயாரிப்புகளை உலகின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யும்போது அவ்வவ்விடங்களின் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யவேண்டியுள்ளது. இதற்கும் ஒலிச்சேர்க்கை நுட்பங்கள் பயன்படுகின்றன.
 
==வழிமுறைகள்==
===தன்னியக்க உரையாடல் பதிலீடு==
தன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் ஒலிப்பதிவு என்பது, படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், படத்தில் நடித்த நடிகர்கள் தமது உரையாடல்களை மீள்பது செய்யும் ஒரு செயற்பாடு ஆகும். [[ஒலித்தரம்|ஒலித்தரத்தை]] மேம்படுத்துவதற்காகவும், உரையாடலில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இது அவசியமாகின்றது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் இருக்கக்கூடிய சொற் தெளிவு, நேர இசைவுக் குறைபாடு, உச்சரிப்புக் குறைபாடு போன்றவற்றை நீக்குவதற்கும் இந்த முறை பயன்படுகின்றது.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிச்சேர்க்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது