ஹம்பிறி போகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9,994 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
இவரது கடற்படை பணிக்காலத்தில்தான் இவரது தனி அடையாளமான உதட்டு தழும்பு ஏற்பட்டிருக்க கூடும். இருந்தபோதிலும் இதனை எந்த சூழல் இவருக்கு தந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. யூஎஸ்எஸ் லெவியத்தான் என்கிற கப்பலின் மீது வீசப்பட்ட குண்டுகளில் இருந்த ஒரு கூர்தகடு இவரது உதட்டை கிழிதிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலர் ஜெர்மனி ஆயுத ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வரை இவர் காயமின்றி இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.
 
போகார்ட் இந்த தழும்பினை கடலில் பெறவில்லை எனக்கூறுவோரும் உண்டு. போகார்டின் நீண்ட கால நண்பரும் எழுத்தாளருமான நாதானியேல் பெஞ்ச்லி வேறுமாதிரி கூர்கிறார். மையின் மாநிலத்தின் கிட்டரே நகரில் உள்ள ஒரு கடற்படை சிறைச்சாலைக்கு ஒரு கைதியை அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட தழும்பு இது. ஒரு தொடர்வண்டி நிலயத்தில் கைதி ஒரு சிகரட்டை கேட்க போகார்ட் அவனுக்கு தர வத்திக்குச்சியை தேடிய பொழுது விலங்கிடப்பட்ட தனது கைகளால் போகார்டின் வாயை நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான் அந்தக் கைதி. இந்த தாகுதலில் போகார்டின் மேலுதடு கிழிந்துவிட்டது. பின்னர் அக்கைதி பிடிபட்டு போர்ட்ஸ்மவுத் கொண்டுவரப்பட்டான். இதன் இன்னொரு வடிவமாக இது ரயில் நிலையதில் நடந்ததல்ல சிறையில் என்றும் சொல்வார்கள்.
 
எப்படியோ மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தழும்பு உருவாகிவிட்டிருந்தது. நாசமா போன மருத்துவர் தையல போடுன்ன தழும்பை போட்டுட்டார் என போகார்ட் பின்னர் சொன்னார். டேவிட் நிவியன் ஒருமுறை இந்த தழும்பு உருவானதை கேட்டிருக்கிறார். அது எனக்கு சின்ன வயசில இருந்து இருக்கு என்று சொல்லியிருகிறார் போகார்ட்! நிவியன் போகார்டின் தழும்புகள் குறித்து உலவும் கதைகள் அவரது நட்சத்திர பிம்பத்தை கவர்சிகரமாக ஆக்குவதற்காக பட தயாரிப்பு நிறுவனங்களால் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்.
 
ஆனால் அவரது பணிவிடுப்பு அறிக்கையில் பல்வேறு தழும்புகள் குறித்து பதிவுகள் இருந்தாலும் உதட்டு தழும்பு குறித்து குறிப்புகள் ஏதும் இல்லாது இருப்பது இவர் இந்தத் தழும்பை பின்னர் தான் பெற்றிருக்க வேண்டும் என்று உறுதிசெய்கின்றன.
 
நடிகை லூயிஸ் புரூக் ஒருமுறை இவரை 1924இல் பார்த்த பொழுது இவரது மேலுதட்டில் சில தழும்பு திசுக்கள் இருந்ததை பார்த்திருக்கிறார். 1930இல் திரைத்துறைக்கு வரும் முன் இவரது தழும்பிற்கு ஓரளவு சிகிச்சை எடுத்திருக்கலாமென பெல்மான்ட் கூறுகிறார். இவரது மேலுதட்டு தழும்பு இவரின் பேச்சையோ அல்லது உச்சரிப்பையோ எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார் லூயிஸ் புரூக். வருடகணக்கில் போகார்ட் உதட்டிற்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை மேற்கொண்டார். கொஞ்சம் மூக்கால் பேசுவதுபோல, மெல்லிய ஒலிகளை உச்சரிப்பதில் கொஞ்சம் சிரமம் என போகர்ட் தனது குறைகளையே தனது முத்திரைகளாக மாற்றிக்கொண்டார். இவரது பேயின்புன்னகை போன்ற முறுவல் திரையில் வந்ததில் ஆகச்சிறந்தது என்கிறார் லூயிஸ் புரூக்.
 
==ஆரம்ப கால திரைவாழ்க்கை==
கடற்படையிலிருந்து உடல்நலிவுற்ற தனது தந்தையை பார்க்க வந்தார் போகார்ட். தந்தையின் மருத்துவ சேவை நலிவடைந்தது அவர் ஒரு மார்பின் அடிமையாக மாறியிருந்தார். குடும்பதின் பெருமளவு பணத்தை மரத்தில் முதலீடு செய்து அதை இழந்திருந்தார்.
 
போகார்ட் தனது கடற்படை நாட்களில் குடும்பத்தின் கலாச்சார அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்றிருந்தார். இது அவரை ஒரு தாராள மனப்பான்மை உள்ள மனிதராக மாற்றியிருந்தது. போலியாக நடிப்பது, பணமோகம்பிடித்த பணக்காரகளின் நட்பு, ஏழைகளை எள்ளுவது, மரபுசார்ந்த நடத்தை, மற்றும் அதிகாரம் போன்றவற்றை அவர் வெறுக்க துவங்கினார். இந்த வெறுப்பினையே இவர் தனது படங்களின் பாத்திரங்களின் மூலம் பிரதிபலித்தார்.
 
அதே சமயத்தில் தனது குடும்பம் தனக்கு தந்திருந்த, நன்னடத்தை, தெளிவாக பேசுதல், நேரந்தவறாமை, கண்ணியம், மற்றும் தொட்டு தொடு பேசுவதை வெறுப்பது போன்ற நற்பண்புகளை கடைசிவரை கடைபிடித்தார். கடற்படை சேவைக்கு பின்னர் சில நாட்கள் இவர் ஒரு ஷிப்பர்ராகவும் (லாரி சர்வீஸ் போல மூவழிகளிலும் பொருட்களை கொண்டுசேர்க்கும் வேலை) பத்திர விற்பனையாளாராகவும் பணியாற்றினார்.
 
பின்னர் தனது சிறுவயது நண்பன் பில் பிராடி ஜூனியரிடம் நட்பினை புதுப்பித்தார். சீனியர் ப்ராடி திரைத்துறை தொடர்புகளோடு இருந்தார். அவர் வேர்ல்ட் பில்ம்ஸ் எனும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த பொழுது போகார்ட் அந்நிறுவனத்தில் ஒரு அலுவலக பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல் என பல்வேறு பணிகளை முயற்சித்தார். ஒன்றில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
 
ப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட்.
 
==திரைப்பட வாழ்க்கை==
100

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1539682" இருந்து மீள்விக்கப்பட்டது