"இரண்டாம் ஜெய் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜெய் சிங்கிங்கைத் தனது தக்காண போர்களில் பணிபுரியுமாறு அவுரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அவ்வாணைக்குப் பதிலளிப்பதில் ஜெய் சிங் ஓராண்டு காலம் தாழ்ந்துவிட்டான். இதற்கான காரணங்களில் ஒன்று தனது ''மன்சப்''பிற்கு (பதவிக்கு) மீறிய அளவில் ஒரு பெரிய படையை உருவாக்குமாறு ஜெய்சிங் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும், 1701 மார்ச்சு மாதத்தில் சியோப்பூரின் அரசனான ராஜா உத்தம் ராம் காவரின் மருமான் உதித் சிங்கின் மகளைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றியும் ஜெய் சிங் முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஜெய் சிங் ஆகத்து 3, 1701 அன்று புர்ஹான்பூரை அடைந்தான் ஆனால் கனத்த மழை காரணமாய் அவனால் மேற்கொண்டு முன்னேற இயலவில்லை. செப்டம்பர் 13, 1701 அன்று அவனது பதவியும் ஊதியமும் (500 அளவு) குறைக்கப்பட்டன. கெல்னா முற்றுகையின் பொழுது (1702) இவன் காட்டிய போர்த்திறத்திற்குப் பரிசாய் இவனது முந்தைய பதவி மீண்டும் வழங்கப்பட்டு மேலும் ”சவாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவுரங்கசீப்பின் பேரன் பிதார் பக்கத் சவாய் ஜெய் சிங்கை மால்வா மாகாணத்தின் ஆளுனராக நியமித்தபொழுது (1704) அவுரங்கசீப் மிகுந்த சினத்துடன் அதனை ''ஜெய்சு நிஸ்டு'' (செல்லாதது அல்லது இசுலாத்திற்கு எதிரானது) என்று ரத்து செய்தான்.
 
==சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
 
<references/>
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1539768" இருந்து மீள்விக்கப்பட்டது