இரண்டாம் ஜெய் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
==சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்==
பலநூற்றாண்டுகள் வழக்கற்று இருந்த அசுவமேதம் (1716) மற்றும் வாஜபேயம் (1734) போன்ற வேத யாகங்களை மீண்டும் நடத்திய முதல் இந்து அரசன் என்ற பெருமை சவாய் ஜெய் சிங்கிற்கு உரியதாகும், இரண்டு வேள்விகளின் பொழுதும் பெருந்தொகைகள் யாசகமாக வழங்கப்பட்டன. வைணவத்தின் நிம்பருக்க சம்பிரதாயத்தில் தீட்சை பெற்ற இவன் சமற்கிருத படிப்பையும் பெருமளவில் ஊக்குவித்தான், சதி சடங்கை ஒழித்தல் மற்றும் ராஜபுத்திர திருமணச் சடங்குகளில் பெருஞ்செலவுக்குக் காரணமன சடங்குகளை நிறுத்துதல் போன்ற இந்து சமுதாய சீர்திருத்தங்களையும் செய்துள்ளான். அவுரங்கசீப்பினால் ஹிந்து மக்கள்மீது விதிக்கப்பட்டிருந்த, மக்களால் வெறுக்கப்பட்ட, ஜசியா வரி இவனது வற்புறுத்தலின் பயனாகவே 1720-இல் பேரரசன் முகம்மது ஷாவினால் நீக்கப்பட்டது. கயாவில் ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட யாத்திரை வரியும் ஜெய் சிங்கின் முயற்சியாலேயே 1728-இல் நீக்கப்பட்டது.
[[படிமம்:Jantar Mantar Delhi 27-05-2005.jpg|200px|thumb|வலது|தில்லியில் உள்ள சவாய் ஜெய் சிங் கட்டிய ஜந்தர் மந்தர் வானாய்வகம்]]
 
தில்லி, மதுரா (ஆக்ரா மாகாணத்தில் உள்ளது), பனாரஸ் (காசி), உஜ்ஜைனி (மால்வா மாகாணத்தின் தலைநகர்) மற்றும் தனது சொந்த தலைநகரான ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஜெய் சிங் ஐந்து விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கட்டினான். ஜெய்ப்பூரில் இருக்கும் ஆய்வுக்கூடம் மட்டும் இன்றளவும் உள்ளது. இந்திய வானியல் அறிவை முதன்மையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடங்கள் கிரகணங்கள் மற்றும் அவை போன்ற பிற விண்வெளி நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் இவ்வாய்வுக்கூடங்களுக்குப் பார்வையிட வந்த ஐரோப்பிய வானியல் அறிஞர்களின் திறத்தைவிடவும் சிறந்தனவாய் இருந்தன இவ்வாய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் முறைகளும். ”ஜந்தர் மந்தர்” என்று அழைக்கப்பட்ட இவ்வாய்வகங்களில் ''ராம் யந்தரா'', ''ஜெய் பிரகாஷ்'', ''சாம்ராட் யந்தரா'', ''திகம்சா யந்தரா'' மற்றும் ''நரிவலய யந்தரா'' போன்ற பொறிகள் அமைந்திருந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ஜெய்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது