"வெப்ப இயக்கவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 90 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
தொடக்கத்தில் இத்துறையானது [[நீராவிப் பொறி|நீராவி எஞ்சினின்]] [[பயனுறு திறன்|பயனுறு திறனை]] (''efficiency'') மேம்படுத்துவதற்காகவே உருவாக்கி வளர்க்கப்பட்டது.
 
== அமைப்பு ==
வெப்ப இயக்கவியலில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை '''அமைப்பு''' என்கிறோம். அமைப்பைச் சுற்றி இருக்கும் ஏனைய அனைத்தும் சுற்றுப்புறமாகும் (surrounding). அமைப்பு மற்றும் சுற்றுப் புறம் சேர்ந்த தொகுப்புக்கு '''அண்டம்''' (Universe) என்று பெயர். அமைப்பை அதன் தன்மையைப பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
• திறந்த அமைப்பானது (open system) நிறை மற்றும் ஆற்றலை தன்னுள் செல்ல அனுமதிக்கக் கூடியதாகும். உதாரணம்: காற்று அழுத்தி (compressor), சுழலி (turbine)
• மூடிய அமைப்பு (closed system) என்பது ஆற்றலை மட்டுமே அனுமதிக்கும். நிறையை அனுமதிக்காது. உதாரணம்: அழுத்த சமையற்கலன் (pressure cooker)
• தனித்த அமைப்பு (isolated system) நிறை மற்றும் ஆற்றல் இரண்டையுமே தன்னுள் செல்ல அனுமதிக்காது.
அமைப்பின் வகைகளை எளிய உதாரணங்கள் வாயிலாக விளக்கலாம். நாம் மூடப் படாத பாத்திரத்தில் சமைக்கும் பொது நீராவி (steam) கலனை விட்டு வெளியேறும். வெளியேறும் நீராவி வெப்ப ஆற்றலைக் கொண்டிருக்கும். இது ''திறந்த அமைப்பாகும்''. நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் அமைப்புகள் திறந்த அமைப்புகள் ஆகும். அழுத்த சமையற் கலனில் உணவு சமைக்கும் போது கலனை விட்டு நீராவி வெளியேறாது. ஆனால் வெப்பம் கலனுக்குள் செல்கிறது. இது ''மூடிய அமைப்பை''க் குறிக்கிறது. சமைத்த பின் பொருளை வெப்பக் குடுவைக்குள் (Thermo flask) வைக்கும் போது நிறை மற்றும் ஆற்றல் இரண்டுமே வெளியேறுவது இல்லை. இது ''தனித்தஅமைப்பு'' ஆகும். ஆனால், தனித்த அமைப்பானது கருத்தளவில் மட்டுமே கூறப்படுகிறது.. வெப்பக் குடுவையில் சிறிதளவாயினும் வெப்பப் பெயர்ச்சி நிகழும். புரிதலை எளிதாக்குவதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
அமைப்பை அதன் சுற்றுப் புறத்தில் இருந்து பிரிப்பது எல்லை எனப்படும்.. எல்லை உண்மையானதகவோ, கற்பனையாகவோ, நிலையானதாகவோ அல்லது நகரக் கூடியதாகவோ இருக்கலாம்.
 
== அமைப்பின் பண்புகள் ==
அமைப்பின் குணாதிசியங்களை அதன் பண்புகள் (properties) என்கிறோம். அழுத்தம்(pressure), வெப்பநிலை(temperature), கன அளவு(volume), நிறை(mass), பாகுநிலை(viscosity), வெப்பக் கடத்துதிறன்(thermal conductivity), மின்கடத்துதிறன்(electrical conductivity) என்பன சில பண்புகளாகும். அமைப்பின் பண்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
நிறையைச் சார்ந்திராத பண்புகள் பொருண்மை சாராப் பண்புகள் அல்லது அகப் பண்புகள் (intensive properties) எனவும், நிறை மற்றும் அளவைச் சார்ந்துள்ள பண்புகள் பொருண்மைசார் பண்புகள் அல்லது புறப் பண்புகள் (extensive properties) எனவும் அழைக்கப்படுகின்றன.
வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியவை நிறையைச் சார்ந்து மாறுவது இல்லை. இவை அகப் பண்புகளுக்கு உதாரணங்களாகும். மேலும் இவற்றை பாகங்களாகப் பிரிக்க இயலாது. நிறை மற்றும் கனஅளவு போன்றவை அமைப்பின் அளவைச் சார்ந்து இருப்பவை. இவற்றை பாகங்களாகப் பிரிக்க முடியும். இவை புறப் பண்புகள் ஆகும்.
 
== வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி ==
ஒன்றுக்கொன்று வெவ்வேறான மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பானது முதல் மற்றும் இரண்டாவது அமைப்புகளுடன் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால், முதல் மற்றும் இரணடாவது அமைப்புகளும் தங்களுக்குள் வெப்பச் சமநிலையில் இருக்கும். வெப்பநிலை என்னும் கருத்து வெளிவரக் காரணமாக இருந்தது இந்த வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி ஆகும்.
 
== வெப்ப இயக்கவியல் முதல் விதி ==
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1540086" இருந்து மீள்விக்கப்பட்டது