தெற்கு பாகா கலிபோர்னியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 102:
}}
'''தெற்கு பாகா கலிபோர்னியா''' (''பாகா கலிபோர்னியா சுர்'', ''Baja California Sur'', {{Audio-IPA|BajaCaliforniaSur.ogg|/ˈbaxa kaliˈfornja sur/}}), அல்லது "கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு", அலுவல்முறையில் ''' கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம்''' ({{lang-es|Estado Libre y Soberano de Baja California Sur}})எனப்படுவது மக்கள்தொகைப்படி [[மெக்சிக்கோ]] நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள மெக்சிக்கோ நாட்டின் 31வது மாநிலமாக அக்டோபர் 8, 1974இல் இணைந்தது. அதற்கு முன்னதாக இப்பகுதி '''பாகா கலிபோர்னியாவின் தெற்கு ஆட்புலம்''' என அழைக்கப்பட்டு வந்தது. [[பாகா கலிபோர்னியா மூவலந்தீவு|பாகா கலிபோர்னியா மூவலந்தீவின்]] தென்பகுதியில் {{convert|73475|km2|sqmi|0|abbr=on}}பரப்பில் அமைந்துள்ள இந்த மாநிலம் மெக்சிக்கோவின் நிலப்பகுதியில் 3.57% ஆக உள்ளது. இதன் வடக்கில் [[பாகா கலிபோர்னியா]]வும் மேற்கில் [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலும்]], கிழக்கில் [[கலிபோர்னியா வளைகுடா]]வும் அமைந்துள்ளன. கலிபோர்னியா வளைகுடாக் கடல்கடந்த எல்லைகளை கிழக்கில் [[சோனோரா]] மற்றும் [[சினலோவா]] மாநிலங்களுடன் கொண்டுள்ளது.
{{As of|2010}}கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 637,026 ஆக இருந்தது. இதன் மிகப் பெரிய நகரமும் தலைநகருமாக [[இலா பாசு, தெற்கு பாகா கலிபோர்னியா|லா பாஸ்]] உள்ளது.இது ஓர் சுற்றுலாத் தலமாகவும் வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க லோரெட்டோ நகரம் மூன்று கலிபோர்னியாக்களுக்கும் (தெற்கு பாகா கலிபோர்னியா, [[பாகா கலிபோர்னியா]], மற்றும் [[கலிபோர்னியா]]) முதல் தலைநகரமாக இருந்துள்ளது. [[அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்]] வடிவமைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் உள்ள சான்ட்டா ரோசாலியா நகரமும் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_பாகா_கலிபோர்னியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது