அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
[[இஸ்லாம்]] ஐந்து பிரதானமான தூண்களில் நிறுவப்பட்டிருக்கின்றது என்று [[குர்ஆன்]] கூறுகின்றது. இதில் முதலாவது கலிமா என்று சொல்லப்படுகின்ற "இறைவனைத் தவிர வேறு எந்தப் பொருளுமேயில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்னும் புனித மந்திரமாகும். அனைத்துச் சிருஸ்டிகளும் இறைவனுக்கு வேறானவையல்ல என்பது அரபு மொழியில் "வஹ்ததுல் வுஜூத்" என்றும், பாரசீக மொழியில் "ஹமவோஸ்த்" என்றும் அழைக்கப்படுகின்றன. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனிலுள்ள பின்வரும் வசனங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 
:1. அவனே ஆதியானவன், அவனே அந்தமானவன், '''அவனே வெளியாகியிருப்பவன்''', அவனே உள்ளாகியிருப்பவன்.
:2. வானம் பூமி இரண்டிலும் இறைவனல்லாத வேறு சிருஸ்டிகள் இருக்குமாயின் அவை கேட்டையடைந்திருக்கும்.
:3. நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு இறைவனுடைய முகம் இருக்கிறது.
:4. அவனைப்போல் எந்தப் பொருட்களும் இல்லை.
:5. நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தவனாக இருக்கிறான்.
:6. இறைவனே கேட்கின்றவனாகவும் அறிகின்றவனாகவும் இருக்கிறான்.
:7. அவனே வானங்களிலும் பூமியிலும் இறைவனாக இருக்கிறான்.
:8. நிச்சயமாக நீங்கள் எறியவில்லை. எனினும் இறைவன்தான் எறிந்தான்.
:9. உங்களுடைய கைகள் முகம்மதுவின் கைகளின் மேல் இல்லை. இறைவனின் கைகளின் மேல் இருக்கின்றன.
 
இந்த வசனங்கள் மாத்திரமன்றி இது போன்ற அநேக வசனங்கள் திருக்குர்ஆனிலுள்ளன. இந்த பிரபஞ்சமும் அதற்கு அப்பாலுள்ளவைகளும் இறைவனுக்கு வேறானவையல்ல, இறைவன் தானானவை என்பதே இஸ்லாம் சமயத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது