லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
விட்கென்ஸ்டைனை 1. முந்திய விட்கென்ஸ்டைன் 2. பிந்திய விட்கென்ஸ்டைன் என அவரால் எழுதப்பட்ட இரண்டு பிரபலமான நூல்களைக் கொண்டு பிரித்து நோக்கும் போது, '''Tractatus Logico-Philosophicus''' என்னும் நூல் அவரது இளமைக்காலத்தில் எழுதப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்டதும் மிகக் கடினமான உவமான தன்மையுடைய வாக்கியங்களையும் கொண்டதாக உள்ளது. நுணுக்கத்தன்மை வாய்ந்ததாகவும், மேலோட்டமான வாசிப்புக்கு உட்படாததாகவும், ஒரு புனித நூல் போன்றும் அது அமைந்துள்ளது. இந்த நூலில் விட்கென்ஸ்டைன் பலவகையான விளக்கங்களை எடுத்துக்கூறியிருந்த போதிலும், அதன் சில பகுதிகள் கருத்து முரண்பாடுபாடுகளையும் கொண்டிருந்தன. ஆனால் விட்கென்ஸ்டைன் Tractatus இல் திருப்திகரமான, திட்டவட்டமான விளக்கங்களை முன்வைத்துள்ளதாகக் கருதினார்.
 
அணு தேர்வுகள் (Atomic facts) பற்றியும், அதன் அர்த்தம் பற்றியும் Tractatus இல் பெளதிக அதீத முறையொன்றைக் கட்டியெழுப்பினார். பெளதிக அதீத முறை எனக் கூறப்படுவதற்குக் காரணம், அதில் அமைந்துள்ள வெளிப்படையானதும் அவதானத்திற்குரியதல்லாததுமான, நுணுக்கமானதும் கடினமானதுமான விடயங்கள் அதில் அமைந்திருந்ததுதான். எவ்வாறாயினும் விட்கென்ஸ்டைன் ' தேர்வுகள் ' என்ற சொல்லுடன் Tractatus ஐ ஆரம்பித்தார். அதில் முதலாவது வாக்கியம் " எது தேர்வுகளாக உள்ளதோ, அதுதான் உலகம் " என ஆரம்பிக்கின்றது. இந்த முழு உலகமும் தேர்வுகளின் மொத்த தொகையேயன்றி பொருட்களின் (OBJECTS) தொகையல்ல. உலகம் தேர்வுகளினால் பிரிக்கப்பட்டுள்ளது. பொருட்கள்தான் உலகத்தின் சாரம். பொருட்கள் (OBJECTS), தேர்வுகள் (FACTS) இரண்டும் ஒன்றல்ல. பொருட்களின் சூழலில் பொருட்களால் ஏற்படும் விளைவுகளைத்தான் அவர் தேர்வுகள் என்று அழைத்தார்.
 
தேர்வுகள் உலகத்திலுள்ள மிகச் சிக்கலான விடயமாகும். " நீரில் மீன் நீந்துகிறது ", " பூனை பாயில் உள்ளது " என்பன ஒரு சிக்கலான தொடர்பாகும். இங்கு நீர், மீன், பூனை, பாய் ஆகியன முக்கியமானவைகளாகக் கருதப்படுவதில்லை. மாறாக " நீரில் மீன் " " பாயில் பூனை " என்பவையே முக்கியமான தொடர்புகளாகும். இவைகள்தான் நிகழ்வுகளாகும். இவ்வகையான நிகழ்வுகளைக் குறிக்கும் கூற்றுக்களைத்தான் விட்கென்ஸ்டைன் தேர்வுகள் எனக் குறிப்பிடுகின்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது