நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 6:
#''உட்காவும் நரம்புகள்'' (Afferent nerves) அல்லது ''உணர்வு நரம்புகள்'' (Sensory nerves) அல்லது ''வாங்கி நரம்புகள்'' (Receptor nerves): இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான [[தோல்|தோலில்]] இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.
#''வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.
#''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.
"https://ta.wikipedia.org/wiki/நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது