நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உடற்கூற்றியல்: *விரிவாக்கம்*
→‎உடற்கூற்றியல்: *விரிவாக்கம்*
வரிசை 6:
நரம்பிழைகள் Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் கீழாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.
 
மைய நரம்புத் தொகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்புகளின் இக்குறிப்ப்பிட்ட அமைப்பானது இடையில் உடையாமல் மிக நீளமாகச் சென்று தோல், [[கண்]] போன்ற உணர்வு உறுப்புக்களையோ, தசை, சுரப்பி போன்ற அல்லது செயற்படு உறுப்புக்களையோ அடையும். இந் நரம்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பொதுவாக இந்த நரம்புகள் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டத் தொகுதி]]யின் குருதிக் கலன்களுடன் இணைந்து உடல் பாகங்களுக்குள் செல்லும்.
 
''நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.''
"https://ta.wikipedia.org/wiki/நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது