அகலத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
==திரைப்படங்களில் அகலத்திரை==
===வரலாறு===
உலகின் முதல் அகலத்திரைத் திரைப்படம் 1897 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. "''த கோர்பெட்-ஃபிட்சிமொன்சு ஃபைட்''" ''(The Corbett-Fitzsimmons Fight)'' என்னும் பெயர் கொண்ட இப்படம் 100 நிமிடங்கள் ஓடியது. இதற்கு 63மிமீ ஈசுட்மன் படச் சுருள் பயன்பட்டது. 1920களில் [[குறும்படம்|குறும்படங்களுக்கும்]], [[செய்திப்படம்|செய்திப்படங்களுக்கும்]] அகலத்திரை பரவலாகப் பயன்பட்டது. 1927 ஆம் ஆண்டில் [[அபெல் கான்சு]] என்பரின் ''நெப்போலியன்'' திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அகலத்திரையில் அமைந்திருந்தன. [[ஃபாக்சு திரைப்பட நிறுவனம்]] 1929 ஆம் ஆண்டில் 70மிமீ படச்சுருளைப் பயன்படுத்தும் "ஃபாக்சு கிரான்டியர்" முறை என அழைக்கப்பட்ட அகலத்திரை முறை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சில படங்களை வெளியிட்டது. 1929ல் இசைப்படமான ''அப்பி டேய்சு'' ''(Happy Days)'' உம் அகலத்திரையில் வெளியானது.
 
இக்காலப் பகுதியில் ''[[ஆர்.கே.ஓ ரேடியோ பிக்சர்சு]]'', ''[[வார்னர் பிரதர்சு]]'' போன்ற நிறுவனங்களும் புதிய முறைகளை உருவாக்கி அகலத்திரைப் படங்களை எடுத்தன. 1932ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் பட நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்ததால் அகலத்திரை முயற்சிகள் கைவிடப்பட்டன. தொலைக்கட்சியின் அறிமுகத்தோடு திரைப்படத்துக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியபோது, இந்தப் போக்கைத் தடுப்பதற்கான ஒரு வழியாக 1953 ஆம் ஆண்டு முதல் மீண்டும் அகலத்திரை திரைப்படங்களில் பயன்பாட்டுக்கு வரலாயிற்று.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/அகலத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது