கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
 
[[படிமம்:Fortbourtange.jpg|thumb|left|200px|[[போர்டாங்கே]] (Bourtange) நட்சத்திர வடிவக் கோட்டை, 1750 ல் இருந்தவாறு மீளமைக்கப்பட்டுள்ளது. [[நெதர்லாந்து]] நாட்டில் உள்ளது.]]
அரசர்கள் முதலிய முக்கிய மனிதர்களையும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளையும் பாதுகாப்பதற்காகவே கோட்டைகள் கட்டப்பட்டன. சில கோட்டைகளுள் முக்கியமானவர்களின் தங்குமிடங்களும், [[போர்வீரர்|போர்வீரர்களுக்கான]] வசதிகளும், சில அரச [[அலுவலகம்|அலுவலகங்களும்]] மட்டுமே அமைந்திருக்க வேறு சில கோட்டைகள் [[நகரம்|நகரங்களையே]] அவற்றுள் அடக்கியிருந்தன. எதிரிகள் கடப்பதற்குக் கடினமாக இருப்பதற்காக கோட்டைகள் உயர்ந்த மதில்களைக் கொண்டிருந்தன. அந்த மதில்களில் ஆங்காங்கே போர்வீரர்கள் இருந்து சுற்றாடலைக் கண்காணிப்பதற்கான [[காவற்கோபுரம்|காவற்கோபுரங்கள்]] அமைந்திருக்கும். இம் மதில்களினதும்இம்மதில்களினதும் காவற்கோபுரங்களினதும் வடிவமைப்பு, கோட்டை எதிரிகளினால் தாக்கப்படும்போது இலகுவாக எதிர்த் தாக்குதல் நடத்த வசதியான முறையில் அமைந்திருக்கும். கோட்டை மதிலில் முக்கியமான இடங்களில் மட்டும் வாசல்கள் அமைந்திருக்கும். இவையும் உறுதியான கதவுகளினால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
 
[[படிமம்:RedFort.jpg|right|thumb|250px|இந்தியா, புதுடில்லியிலுள்ள [[டெல்லிக் கோட்டைசெங்கோட்டை]].]]

கோட்டைகள் பல ஆழமான [[அகழி|அகழிகளினால்]] சூழப்பட்டிருப்பதும் உண்டு. கோட்டை [[வாயில்|வாயிலை]] அணுகுவதற்காக அகழிக்குக் குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தேவையேற்படும் போது இப் [[பாலம்|பாலங்களை]] எடுத்துவிடக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது