கையூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கையூட்டு''' அல்லது '''இலஞ்சம்''' என்பது, [[ஊழல்|ஊழலின்]] ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது [[கடமை]]களுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது [[சட்டம்|சட்டத்துக்குப்]] புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள [[அலுவலர்]] அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது.
 
==கையூட்டுற்கு எதிரான சட்டங்கள்==
கையூட்டு போன்ற தண்டனைக்குரிய ஊழல்கள் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளையர் அரசின் இந்திய தண்டனை சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால், சுதந்திர இந்திய அரசு 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது.
 
பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், மக்கள்மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதிஉதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
==ஊழல் தடுப்புச்சட்டத்தின்படி ’ஊழல்’ எனபதின் விளக்கம்==
அரசு ஊழியர் தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில்
சாதகமாக செய்யவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியாக ஊதியம் அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7ன் கீழ் ஒரு குற்றச்செயலாகும். மேலும் ஒரு நபர், அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையை
செய்யவோ அல்லது செய்யவிடாமல்
 
==தண்டனைகள்==
இக்குற்றம் நிருபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் ஆறு மாதங்களும், அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/கையூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது