"திரையரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,167 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''திரையரங்கு''' என்பது தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''திரையரங்கு''' என்பது [[திரைப்படம்|திரைப்படங்களைப்]] பார்ப்பதற்கான ஒரு இடம் ஆகும். சில தற்காலிகத் தேவைகளுக்காகவும், வசதிகள் குறைந்த இடங்களிலும் திரைப்படங்களைத் திறந்த வெளியில் காண்பிப்பது உண்டு. ஆனால், தற்காலத்தில் திரையரங்குகள் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்ட [[கட்டிடம்|கட்டிடங்களாகவே]] இருக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகள் பொதுமக்களுக்குத் திரைப்படங்களைக் காண்பிப்பதற்காக வணிக நோக்கில் இயங்குகின்றன. மக்கள் குறித்த தொகையைக் கொடுத்து [[நுழைவுச் சீட்டு]]க்களை வாங்கித் திரை அரங்குகளில் திரைப்படம் பார்க்கின்றனர். திரையரங்குகளின் ஒரு பக்கத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு இருக்கும். [[படமெறிகருவி]]களைப் பயன்படுத்தி அத்திரையில் படம் காண்பிக்கப்படும். பார்வையாளர்கள் திரையை நோக்கியபடி அமர்ந்து திரைப்படங்களைப் பார்ப்பர். நவீன திரையரங்குகள் [[எண்ணிமப் படமெறிதல்]] வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன. இதனால், [[திரைப்படச் சுருள்]]களை உருவாக்கும் தேவையும், அவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு எடுத்துச் செல்லும் தேவையும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544134" இருந்து மீள்விக்கப்பட்டது