திரையரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:L'Idéal Cinéma -Jacques Tati.jpg|thumb|right|ஆனிச் என்னும் இடத்தில் உள்ள ''லா ஐடியல் சினிமா'' திரையரங்கு. 1905 நவம்பர் 23ல் திறக்கப்பட்டது. உலகில் தற்போது இயங்கிவரும் மிகப் பழைய திரையரங்கு இதுவே எனப்படுகிறது.]]
[[File:Cinemaaustralia.jpg|thumb|ஆசுத்திரேலியாவில் உள்ள ஒரு திரையரங்கு]]
'''திரையரங்கு''' என்பது [[திரைப்படம்|திரைப்படங்களைப்]] பார்ப்பதற்கான ஒரு இடம் ஆகும். சில தற்காலிகத் தேவைகளுக்காகவும், வசதிகள் குறைந்த இடங்களிலும் திரைப்படங்களைத் திறந்த வெளியில் காண்பிப்பது உண்டு. ஆனால், தற்காலத்தில் திரையரங்குகள் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்ட [[கட்டிடம்|கட்டிடங்களாகவே]] இருக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகள் பொதுமக்களுக்குத் திரைப்படங்களைக் காண்பிப்பதற்காக வணிக நோக்கில் இயங்குகின்றன. மக்கள் குறித்த தொகையைக் கொடுத்து [[நுழைவுச் சீட்டு]]க்களை வாங்கித் திரை அரங்குகளில் திரைப்படம் பார்க்கின்றனர். திரையரங்குகளின் ஒரு பக்கத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு இருக்கும். [[படமெறிகருவி]]களைப் பயன்படுத்தி அத்திரையில் படம் காண்பிக்கப்படும். பார்வையாளர்கள் திரையை நோக்கியபடி அமர்ந்து திரைப்படங்களைப் பார்ப்பர். நவீன திரையரங்குகள் [[எண்ணிமப் படமெறிதல்]] வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன. இதனால், [[திரைப்படச் சுருள்]]களை உருவாக்கும் தேவையும், அவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு எடுத்துச் செல்லும் தேவையும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/திரையரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது