"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,434 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== பிறப்பு ==
[[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரிலிருந்து]] வடக்கே ஏறத்தாழ 12 [[கிலோமீற்றர்]] தொலைவிலுள்ள [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் விவசாயக் கிராமத்தில் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய ஆதீன பரம்பரையில் வாழ்ந்துவந்த சைவ அந்தணர் குல சின்னையர் என்பவருக்கும் சின்னம்மாளுக்கும் ஐந்தாவது புதல்வராக 15-26-3-1878 இல் கணேசையர் பிறந்தார்.
ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய அர்ச்சக பரம்பரையில் வந்தவர் சின்னையா என்னும் அந்தணப் பெரியார். அவர் வினயகப்பெருமானிடத்து மிகுந்த பக்தி பூண்டவர்.தாம் பூசிக்கும் படிகலிங்கத்துகுப் பூசனை புரிந்தன்றி உணவு கொள்ளாத நியமம் பூண்டவர். அவ்விலிங்கத்தை நாள் தோறும் நூற்றெட்டுத்தரம் வீழ்ந்து வணங்கி எழும் வழக்கம் உள்ளவர்.இவ்வீடுபாட்டால் பொருட்செல்வப் பேறு குறைந்தவர். அவர் அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவரை விவாகஞ்செய்து நால்வர் பெண்மக்களுக்குத் தந்தையாயினர். அதனாலேற்பட்ட வறுமையாலும் ஆண்பிள்ளை இல்லை என்ற குறையினாலும் அவருக்குண்டான கவலை அவரது கடவுள் பக்தியை மேலும் வளர்பதாயிற்று. ஆண்பிள்ளை வேண்டி விநாயகப் பெருமானை நோக்கித் தவம் புரிந்தனர். அதன் பயனாக ஆங்கில வருடம் 1878 இல் நிகழ்ந்த ஈசுர வருடம் பங்குனி மாதம் 15ம் நாள் செவ்வாய்கிழமை பிற்பகல் 1மணி 20நிமிசமளவில் பூராடம் 3ம் காலில் அவருக்கு ஓராண்மகவு பிறந்தது. விநாயகப்பெருமான் அருளாற் பிறந்தமையால் அம்மகவுக்குக் கணேசையர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்மகவே பிற்காலத்தில் வித்துவசிரோமணி எனச் சிறப்பிக்கப்பட்ட பிரம்மஸ்ரீ கணேசையர் ஆகும்.
 
== கல்வி ==
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544288" இருந்து மீள்விக்கப்பட்டது