"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== இல்லற வாழ்வு ==
 
தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியான அன்னலட்சுமியைத் திருமணஞ் செய்தார். அன்னலட்சுமியும் வடமொழி, மற்றும் தமிழறிவு பெற்றவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மனைவியார் இறந்தபின் கணேசையர் மனைவியின் நினைவாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு [[கிணறு]] வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபம்" எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை நன்கொடையாக அளித்தார். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உள்ளது<ref name="mahajana">வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம் - மகாஜனாக் கல்லூரி</ref>.
ஐயர் அவர்கள் தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய உருவும் திருவும் நிறைந்த அன்னலட்சுமி அம்மையைத் திருமணம் செய்தவர்.அம்மையாரும் வடமொழி தென்மொழி அறிவுடையவர்.நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர்.இல்லற வாழ்கையின் பயனாக அவர்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைத்திலது.மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு அன்னலட்சுமி கூபம் எ எனப் பெயரிட்டு வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனைத் தருமசாசனம் பண்ணியிருக்கிறார்கள்.அவ்வாலயத்துக்கு,முன்னே பலர்,பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் அவர்கள் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீருற்றிலது. ஐயரவர்கள்,
 
ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே
கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை -நாட்டிடுவாய்
மாமருதி லீசா மதமா முகத்தோனே
காமுறுவேற் குள்ளம் கனிந்து
 
என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பி,தம்பணியைத் தொடர்ந்து செய்து நீருறக்கண்டு மகிழ்ந்தனர்.அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உளது.ஏனைய சொத்துகளையும் ஐயர் அவர்கள் தம்மினத்தில் உரிமையாளருக்குக் கையளித்து பொருட்பற்றினும் நீங்கி உள்ளத் துறவியாய்,மருதடி விநாயகர் ஆலயமருங்கில் ஓர் ஆசிரமம் அமைத்து அதில் வதிந்து,தமிழாராய்ச்சி செய்து கொண்டும்,விநாயகரை வழிபட்டுக் கொண்டும் வாழ்ந்தார்கள்.தேகவியோகமெய்தியதும் இவ்வாசிரமத்தின் கண்ணேயாம்.
 
== இலக்கண - இலக்கியப்பணி ==
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544292" இருந்து மீள்விக்கப்பட்டது