"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12,409 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|caption = சி. கணேசையர்
|birth_name =
|birth_date = {{birth_date|1878|34|261}}
|birth_place = [[புன்னாலைக்கட்டுவன்]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|death_date = {{death_date and age|1958|11|8|1878|3|26}}
 
== பிறப்பு ==
[[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரிலிருந்து]] வடக்கே ஏறத்தாழ 12 [[கிலோமீற்றர்]] தொலைவிலுள்ள [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் விவசாயக்வேளாண்மைக் கிராமத்தில் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய அர்ச்சக பரம்பரையில் வந்த சின்னையா என்னும் அந்தணப் பெரியாருக்கும், அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவருக்கும் ஒரே மகனாகவும் ஐந்தாவது பிள்ளையாகவும் [[1878]] ஈசுர ஆண்டு பங்குனி மாதம் 15ம் நாள் (ஏப்ரல் 1) பிற்பகல் 1 மணி 20 நிமிடமளவில் பூராடம் 3ம் காலில் பிறந்தார் கணேச ஐயர்.
ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய அர்ச்சக பரம்பரையில் வந்தவர் சின்னையா என்னும் அந்தணப் பெரியார். அவர் வினயகப்பெருமானிடத்து மிகுந்த பக்தி பூண்டவர்.தாம் பூசிக்கும் படிகலிங்கத்துகுப் பூசனை புரிந்தன்றி உணவு கொள்ளாத நியமம் பூண்டவர். அவ்விலிங்கத்தை நாள் தோறும் நூற்றெட்டுத்தரம் வீழ்ந்து வணங்கி எழும் வழக்கம் உள்ளவர்.இவ்வீடுபாட்டால் பொருட்செல்வப் பேறு குறைந்தவர். அவர் அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவரை விவாகஞ்செய்து நால்வர் பெண்மக்களுக்குத் தந்தையாயினர். அதனாலேற்பட்ட வறுமையாலும் ஆண்பிள்ளை இல்லை என்ற குறையினாலும் அவருக்குண்டான கவலை அவரது கடவுள் பக்தியை மேலும் வளர்பதாயிற்று. ஆண்பிள்ளை வேண்டி விநாயகப் பெருமானை நோக்கித் தவம் புரிந்தனர். அதன் பயனாக ஆங்கில வருடம் 1878 இல் நிகழ்ந்த ஈசுர வருடம் பங்குனி மாதம் 15ம் நாள் செவ்வாய்கிழமை பிற்பகல் 1மணி 20நிமிசமளவில் பூராடம் 3ம் காலில் அவருக்கு ஓராண்மகவு பிறந்தது. விநாயகப்பெருமான் அருளாற் பிறந்தமையால் அம்மகவுக்குக் கணேசையர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்மகவே பிற்காலத்தில் வித்துவசிரோமணி எனச் சிறப்பிக்கப்பட்ட பிரம்மஸ்ரீ கணேசையர் ஆகும்.
 
== கல்வி ==
 
கணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தையாரால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த [[வண்ணார்பண்ணை]]யில் வசித்து வந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.
 
பொன்னமபலப்பிள்ளையவர்கள் இறந்தபின் [[சுன்னாகம்]] [[சுன்னாகம் குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரிடம்]] சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.
 
பொன்னமபலப்பிள்ளையவர்கள் இறந்தபின் [[சுன்னாகம்]] [[சுன்னாகம் குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரிடம்]] சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.
கல்வி பயிலல்: அக்காலத்தில் சின்னையர் அவர்களின் தமயனாராகிய கதிர்காமையர் வடமொழி தென்மொழிகளிற் பாண்டித்தியம் பெற்றவராய் விநாயகர் ஆலய மருங்கில்
ஒரு பாடசாலை தாபித்து அதில் கற்பித்து வந்தார்கள். அப்பாடசாலையே இப்போது அரசினர் பாடசாலையாக விளங்குவது. ஐந்து வயதில் ஐயரவர்கள் அப்பாடசாலையில்
வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றார்கள். எட்டாம் வகுப்பு முடிய அப்பாடசாலையிற் கற்றார்கள். அங்கு நீதி நூல்கள் அந்தாதிகள், பிள்ளைத் தமிழ்கள், இலக்கணம், நிகண்டு,
புராண நூல்கள், சரித்திரம், சமயம், கணிதம் என்பனவற்றில் பயிற்சி பெற்றார்கள். அக்காலத்தில் எட்டாம் வகுப்புச் சித்தி எய்தினால் மாணவ ஆசரியனாகப்
பயிற்சி பெற்று ஆசிரியனாகக் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு இருந்தது. வறுமை நிலையிலிருந்த பெற்றார்கள் ஐயர் அவர்கள் ஆசிரியனாகக்
கடமைசெய்தலை விரும்பி அதனை எதிர் நோக்கி இருந்தனர். எட்டாம் வகுப்பைப் பரிசோதிக்க வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலம்பிள்ளை அவர்கள் நல்லை. ஆறுமுக நாவலர் அவர்களின் மருகர். நன்மாணாக்கர், புராணேதிகாசங்களுக்குப் பொருள் சொல்வதில் தமிழ் நாட்டில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவர். அவர்கள்
பரீட்சிக்கும்போது ஐயர் அவர்களிடம் “திகழ்தசக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்ற கந்தபுராணக் காப்புச் செய்யுளின் பகுதிக்குப் பொருள் சொல்லுமாறு கேட்டனர். ஐயர்
அவர்கள் தாம் முன்னே கற்றுக்கொண்டபடி விளங்காநின்ற பத்து திருக்கரங்களையும் செவ்விய ஐந்து திருமுகங்களையும் உடைய சிவபிரான்” எனலும், வித்துவ
சிரோமணி இடைமறித்து உடைமைப் பொருளுக்கன்றி உண்மைப் பொருளுக்கு ஐ உருபை விரிக்கக் கூடாது என்ற இலக்கண நுட்பத்தை எடுத்துக் காட்டி” விளங்காநின்ற
பத்துக்கரங்களும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபிரான்” என்று உரைத்தல் வேண்டும் என்றனர். அவருடைய மதிநுட்பத்தைக் கண்ட ஐயருக்கு அவரிடம் பாடங்கேட்க
வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று. அதனால் மாணவ ஆசிரியப் பயிற்சி பெறவேண்டு மென்ற பெற்றாரின் ஆசையை அவரால் நிறைவேற்ற முடியாது போயிற்று. கல்வியின் மேல் மகன் கொண்ட ஆர்வத்தையறிந்த பெற்றார் தம்மாசையை விட்டு வித்துவ சிரோமணியிடம் படித்தற்கேற்ற ஒழுங்குகளைச் செய்தனர். முதிர்கல்வி கற்றல்: வண்ணார்பண்ணைச் சிவன்கோவிற் பிரகாரத்தில் வசித்த தமது தமக்கையாரின் வீட்டில் தங்கி ஐயர் அவர்கள் அவ்வூரில் வித்துவ சிரோமணியால் நடாத்தப்பட்ட திண்ணைப்
பள்ளிக்கூடத்தில் கல்விகற்று வந்தனர். ஐயர் அவர்களின் மதிநுட்பத்தையும் கல்வியின் மேலுள்ள ஆசையையும் கண்ட வித்துவ சிரோமணிக்கு ஐயர் அவர்களின் மேல்
அன்பு வளர்வதாயிற்று. உயர்ந்த இலக்கண இலக்கியங்களைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றதோடமையாது, புராணேதிகாசங்களுக்குப் பொருளுரைத்தற் பொருட்டும்
வித்துவசிரோமணி சென்றவிடமெல்லாம் தாமும் சென்று அவர்கூறும் அரிய பொருள்களையும், கவிநயங்களையும் குறித்துக் கொள்ளுவார் ஐயர் அவர்கள்.
தந்தையாருக்கு ஆலயத்தில் உதவிசெய்தற் பொருட்டு, புன்னாலைக்கட்டுவனில் தாம் தங்கவேண்டிய காலங்களிற்கூட ஐயர் அவர்கள்
பள்ளிக்கூடங்களுக்கு நடந்துசென்று திரும்புவதில் தமக்கேற்படும் கஷ்டத்தை நோக்கினாரல்லர். வித்துவ சிரோமணி சென்றவிடமெல்லாம் சென்று, கல்வியே கருத்தாகக் கற்றுவந்தார்கள். வித்துவசிரோமணி சிவனடி எய்தியதும் ஐயர் அவர்கள் கல்விக்குக் களைகண்காணாது திகைத்தார்கள். தம் விருப்பினை நிறைவேற்ற வல்லவர் சுன்னாகம் அ.
குமாரசுவாமிப் புலவர் அவர்களே எனத் தேறி அவரிடம் கற்கக் தொடங்கினார்கள். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் வடமொழி தென்மொழிகளில் நிரம்பிய பாண்டித்தியம் உள்ளவர். இலக்கண ஆராய்ச்சி மிக்கவர். சொற்பொருள் விளக்கம் மிக்கவர்.
தருக்கம் வல்லவர். பொய்ப்பொருளைக் களைந்து மெய்ப்பொருளை நாட்டும் திறனுள்ளவர். அதனால் கண்டனப் புலியாக விளங்கியவர். புலவரின் தொடர்பால் ஐயர்
அவர்களுக்கு வடமொழியறிவும் தருக்க அறிவும் மிகுவன ஆயின. ஆராய்ச்சித்திறன் உறுவதாயிற்று. புலவர் சிவனடியெய்தும் வரை ஐயர் அவர்கள் அவரின்
தொடர்பை விட்டாரல்லர். புலவரின் தூண்டுதலால் அவரின் உதவியுடன் ஐயர் அவர்கள் பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்யவும் ஆராய்ச்சிகள் செய்யவும், கண்டனங்கள்
வரையவும், நூல்களுக்கு உரை செய்யவும் தொடங்கினார்கள். அதனால் ஐயர் அவர்களின் புலமை தமிழுலகிற்குப் புலனாகத் தொடங்கியது. புலவர் செய்த நன்றியை ஐயர்
அவர்கள் எக்காலத்தும் மறந்திலர்.
 
== இல்லற வாழ்வு ==
தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியான அன்னலட்சுமியைத் திருமணஞ் செய்தார். அன்னலட்சுமியும் வடமொழி, மற்றும் தமிழறிவு பெற்றவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மனைவியார் இறந்தபின் கணேசையர் மனைவியின் நினைவாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு [[கிணறு]] வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபம்" எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை நன்கொடையாக அளித்தார். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உள்ளது<ref name="mahajana">வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம், ஆக்கம்: பண்டிதர். இ. நமசிவாயம், தமிழ் மன்றம், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1977-04-04</ref>.
 
ஐயர் அவர்கள் தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய உருவும் திருவும் நிறைந்த அன்னலட்சுமி அம்மையைத் திருமணம் செய்தவர்.அம்மையாரும் வடமொழி தென்மொழி அறிவுடையவர்.நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர்.இல்லற வாழ்கையின் பயனாக அவர்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைத்திலது.மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு அன்னலட்சுமி கூபம் எ எனப் பெயரிட்டு வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனைத் தருமசாசனம் பண்ணியிருக்கிறார்கள்.அவ்வாலயத்துக்கு,முன்னே பலர்,பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் அவர்கள் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீருற்றிலது. ஐயரவர்கள்,
 
ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே
கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை -நாட்டிடுவாய்
மாமருதி லீசா மதமா முகத்தோனே
காமுறுவேற் குள்ளம் கனிந்து
 
என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பி,தம்பணியைத் தொடர்ந்து செய்து நீருறக்கண்டு மகிழ்ந்தனர்.அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உளது.ஏனைய சொத்துகளையும் ஐயர் அவர்கள் தம்மினத்தில் உரிமையாளருக்குக் கையளித்து பொருட்பற்றினும் நீங்கி உள்ளத் துறவியாய்,மருதடி விநாயகர் ஆலயமருங்கில் ஓர் ஆசிரமம் அமைத்து அதில் வதிந்து,தமிழாராய்ச்சி செய்து கொண்டும்,விநாயகரை வழிபட்டுக் கொண்டும் வாழ்ந்தார்கள்.தேகவியோகமெய்தியதும் இவ்வாசிரமத்தின் கண்ணேயாம்.
 
== இலக்கண - இலக்கியப்பணி ==
*இராமவதாரத்திற் கவிநயம்
 
== மேற்கோள்களும் உசாத்துணையும் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==உசாத்துணை==
* சிவலிங்கராஜா, எஸ்., வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்
* கணேசையரின் நினைவு மலர்
*வித்துவ சிரோமணி
பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள்
சரித்திரச் சுருக்கம் - ஆக்கம்:
பண்டிதர். இ. நமசிவாயம்-தமிழ் மன்றம்
மகாஜனக் கல்லூரி
தெல்லிப்பழை
1977-04-04
 
==வெளி இணைப்புகள்==
1,15,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544393" இருந்து மீள்விக்கப்பட்டது