"இசுலாமியத் தமிழ் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44,699 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{விக்கியாக்கம்}}
{{merge|தமிழில் இஸ்லாமிய இலக்கியங்கள்}}
[[இசுலாம்|இசுலாமிய]] சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் '''இசுலாமியத் தமிழ் இலக்கியம்''' எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.
 
கி .பி . ஏழாம் நூற்றாண்டில் பக்தி இலக்கியங்கள் பரிணமித்த கால கட்டத்தில், அரபு நாட்டிலே தோன்றிய ஏகத்துவ மார்க்கம் ,தமிழ் மண்ணுக்குள் அறிமுகமானது .சங்க காலம் தொட்டு தொடர்பு கொண்டிருந்த அரபு நாட்டவர் ,யவனர் என்றும் பின்னர் சோனகர் ,துலுக்கர் ,முஸ்லிம்கள் என்றும் அழைக்கப்பட்டனர் .இவர்கள் தமிழ்நாட்டிலும் ,இலங்கையிலும் , சிங்கப்பூர் ,மலேசியா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளிலும் ,தென் ஆப்ரிக்காவிலும் பரவிக்கிடக்கிறார்கள் .இன்றைய உலகமயமான காலத்தில் ,அவர்கள் இல்லாத நாடில்லை எனலாம் .அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதிய சிந்தனைகளையும் ,புதிய பரிமாணங்களையும் வழங்கியுள்ளனர் .இன்றும் அவர்களின் பங்கு வாணிபம் ,கலை, அறிவியலில் சிறந்து விளங்குவதுபோல் ,இலக்கியத்திலும் போற்றுதற்குரியது .தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் ,தங்கள் தாய் மொழியான ,தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது . இஸ்லாமியர்கள் தமிழுக்கு புதிய இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தினர் .
1)மசலா, 2)நாமா 3)கிஸ்ஸா4)முனாஜாத்து 5)படைப்போர் 6)திருமண வாழ்த்து 7)நொண்டி நாடகம் ஆகியவை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும்.
மசலா (புதிர் வினா )என்பது வினா விடை அமைப்பில் கருத்துக்களை கூறுவது .
நாமா (வரலாற்றுக்கதை )வரலாற்று நிகழ்சிகளை கதை வடிவில் இலக்கியமாக கூறுதல் .
கிஸ்ஸா (கதை ) கதை அமைப்பில் மார்க்க நெறிகளை கூறுதல் .
முனா ஜாத்து(இறை வேட்கை )இறை வேட்கையை மனம் நெகிழ்ந்து பாடும் முறை .
திருமண வாழ்த்து -இஸ்லாமிய தமிழர்களின் திருமண நிகழ்சிகளில் இடம் பெரும் பழக்க வழக்கங்களை கூறுதல் .
படைப்போர் -இறைக்கொள்கைக்காக இரு பிரிவுப்படைகள் செய்கின்ற போர் நிகழ்சிகளை கூறுதல் .
இவற்றில் கிஸ்ஸா, மசலா ,முனா ஜாத்து ,ஆகியவை அறிபுச்சொர்களாகும்.நாமா என்பது பாரசீக சொல்லாகும் .
 
==தொடக்கக் காலம்==
மார்கோ போலோ 13ஆம் நூற்றாண்டில் தமிழ் இஸ்லாமிய சமுதாயம் தமிழகத்தில் இருந்ததை தீர்க்கமாக பதிவு செய்திருக்கிறார். அந்த கால கட்டத்தில் இஸ்லாமியர்களின் தமிழ் இலக்கிய பங்களிப்பு பற்றி நமக்கு ஆதாரங்கள் கிடைக்க வில்லை .ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்களின் தமிழ் இலக்கிய சேவை ஆரம்பித்திருக்க வேண்டும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் .பலர் குறைந்தது மாணிக்க வாசகர் காலம் தொட்டு இஸ்லாமிய இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டுமென்று,அவற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் .அதற்கு வெற்றி கிடைக்காத காரணத்தால் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வந்த இஸ்லாமியர்களின் தமிழ் இலக்கியங்கள் ,போர்த்துகீசியர்களால் ,அழிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள் .சமீப காலமாக குறைந்தது 14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் தமிழ் இலக்கியம் இருந்ததற்கான ஆதாரங்களை சொல்கிறார்கள் .ஆதாரமாக பல்சாந்தி மாலை என்ற 8 வரிகள் கொண்ட பாடலை சொல்கிறார்கள்.அதில் சோனகர்களை பற்றியும் ,அல்லாவை பற்றியும் ,சோனக தலைவராக (கலீபா)இருந்த வள்ளலை பற்றியும் ,சொல்லப்படுகிறது .இதன் ஆசிரியர் யார் என்று அறியப்படவில்லை .பல்சாந்தி மாலைக்கு முன்பும் அதற்கு பின்பு 16ஆம் நூற்றாண்டு வரை எந்த தமிழ் இஸ்லாமியர்களின் இலக்கியமும் கிடைக்கவில்லை .மேலும் அதற்கு பின் வந்த இஸ்லாமியர்களின் ,இலக்கியங்களை வைத்து பார்க்கும்போது ,அதை எழுதியது முஸ்லிம் அல்லாதவரால் எழுதப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு . காரணம் பல்சாந்தி மாலையில் பின்னால் வந்த முஸ்லிம்களின் பங்களிப்பில் சர்வசாதரணமாக கலந்திருந்த அரபி பாரசீக வார்த்தைகள் காணப்படாததுதான். அகவே ஒரு இந்துவால் அது எழுதப்பட்டிருக்கலாம் என்று கூட நம்பப்படுகிறது .அல்லது புதிதாக இஸ்லாத்தை தழுவியவரகவும்,அதிகம் அரபி ,பாரசீக வார்த்தைகளில் பரிட்சயம் இல்லாதவராக இருந்திருக்கலாம் .
ஆதார பூர்வமாக முஸ்லிம்களால் எழுதப்பட்ட முதல் தமிழ் இலக்கியம் கிடைக்க 14 ஆம் நூற்றாண்டிலிருந்து ,இரண்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதிருந்தது .1572 இல் எழுதப்பட்ட "ஆயிரம் மசலா என்று வழங்கும் அதிசய புராணம் "தான் இஸ்லாமியரால் எழுதப்பட்ட முதல் ஆதார பூர்வமான தமிழ் இலக்கியம் ஆகும் .இதை எழுதியவர் செய்கு இசாக் என்ற வண்ண பரிமள புலவர் .முழு இலக்கியமும் கேள்வி கேட்டு ,பதில் சொல்லும் முறையில் உள்ளது .அதில் அதிக அளவில் அரபு வார்த்தைகள் கலந்திருப்பதை காணலாம் .என் சிறு வயதில் பக்கிர்பாவாக்கள் ,இரவு நேரங்களில் ஊர் ஊராக, தாஹிர கொட்டு என்று சொல்லப்படும் தப்பு கொட்டி இசையோடு இந்த ஆயிரம் மசலா கதை சொல்வதை கேட்டிருக்கிறேன் . சக்கரவர்த்தி திருமகன் என்ற திரைப்படத்தில் எம்ஜியாரும் ,N .S .கிருஷ்ணன் அவர்களும் அதேபாணியில் தப்பு கொட்டி கேள்வி பதில் முறையில் படுவதை கேட்டிருக்கலாம் .இந்த பாணியை தமிழுக்கு அறிமுக படுத்தியவர்கள் முஸ்லிம்கள் .ஆயிரம் மசலா குரானையும் ,ஹதீதையும் ,ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதாகும் .அதில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் ,நெறிமுறைகள் ,சொர்க்கம் நரகம் ,நபிகள் நாயகத்தின் வாழ்க்கைமுறை ஆகியவை சொல்லப்பற்றிருக்கிறது.சைவ ,வைணவ இலக்கியங்களில் சமயநெறிகள் சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்து சொல்லப்பட்டதுபோல் ,இஸ்லாமியர்களின் பக்தி இலக்கியங்களில் அரபு பாரசீக வார்த்தைகள் கலந்து காணப்படுகிறது .மசலா என்பதே அரபு வார்த்தைதான் . இரண்டாவதாக தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமிகளின் அதிகாரபூர்வமான பங்களிப்பு 1590 இல் ஆலிம் புலவர் அவர்களால் எழுதப்பட்ட மெஹ்ராஜ் மாலை ஆகும் .அதில் நபிகள் நாயகம் மெஹ்ராஜ் இரவில் சுவர்ணம் போய் திரும்பிய சரித்திரத்தை சொல்லி இருக்கிறார் .அது நாயகம் அவர்களின் வாழ்வில் நடந்த அதிசயமாகும் .அவரும் அரபு வார்த்தைகளை அங்கங்கே உபயோகித்திருக்கிறார் .
 
==17 ஆம் நூற்றாண்டு==
பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் ,இஸ்லாமியர்களின் தமிழ் இலக்கியப் பணி கிடைக்கப்பெற்றது 17 ஆம் நூற்றாண்டில் லாகும் .செய்கு நைனார் கான் என்ற புலவர் எழுதிய கனகாபிசேக மாலை, சூபி மகான் பீர் முகம்மது அவர்கள் எழுதிய திருநெறி நீதம் ,சேக்காதி நெய்னா எழுதிய திருமண காட்சி, சகூன் படைப்போர், ஆகியவை 17 ஆம் நூற்றாண்டின் முஸ்லிம்களின் தமிழ் இலக்கியப்படைப்புகளாகும், கணக விராயர் என்று அழைக்கப்பட்ட செய்கு நைனார் கான் எழுதிய கனகாபிசேக மாலை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும், நபித்தோழர்களின் வாழ்க்கையையும் விவரிக்கின்றது .நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசன், ஹுசைன் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் இவர் கொடுத்திருப்பதால், இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது .ஆனால் அடிப்படை இஸ்லாமியவாதிகளின் தாக்கம் இல்லாத அக்கால கட்டத்தில் அப்படி வேறுபாடுகள் இருக்க சாத்தியமில்லை என்ற கருத்தும் உண்டு .மேலும் தமிழ் இஸ்லாமியர்கள் எல்லோருமே சுன்னத் ஜமாஅத் பிரிவை சேர்ந்தவர்கள்தான் .சூபிக்களின் தாக்கமும், பின்னாட்களில் அடிப்படைவாதிகளின் தாக்கமும் இருக்கிறது :சூபி மகான் பீர் முஹம்மது அவர்கள் எழுதிய திருநெறி நீதம் என்ற படைப்பு, ஆயிரம் மசலா போன்று கேள்வி பதில் நடையில் உள்ளது .முழுதும் அந்தாதியாக எழுதப்பட்டிருப்பது அதன் சிறப்பு .இஸ்லாமியருக்கான இஸ்லாமிய நம்பிக்கை,, ஒழுக்கம், சட்ட திட்டங்கள், ஆண்கள் பெண்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் அதில் சொல்லி இருக்கிறார். அதில், சொத்துரிமை ,திருமண சட்டங்கள் ஆகிய இஸ்லாமிய சட்ட விளக்கங்களை சொல்லி இருக்கிறார் .இறுதியில் உலகின் முடிவையும் ,நியாயத்தீர்ப்பு நாள் பற்றியும், சுவனம் ,நரகம் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
:திருமணக்காட்சியில் சேக்காதி நெய்னா அவர்கள் சொர்க்கத்தில் நபிகள் நாயகத்தின் திருமணம் ,இறுதி தீர்ப்பு நாட்களுக்கு பிறகு சொர்க்கத்தில் நடப்பதாக கற்பனை செய்து எழுதி இருக்கிறார். சகூன் படைப்போர் 17 ஆம் நூற்றாண்டின் கடைசியில் எழுதப்பட்ட தமிழ் போர் இலக்கியம் ஆகும் .முஸ்லிம்களுக்கும் ,மற்றவர்களுக்கும் இராக்கில் நடந்த போரை பற்றியதாகும் .இறுதியில் முஸ்லிம்கள் வெற்றிகண்டு எதிர்ப்படை தலைவன் சகூன் நபிகளிடம் சரணடைந்து, இஸ்லாத்தை ஏற்றுகொள்கிறான் .நாயகம் அவர்கள் அவனை மரியாதையாக நடத்தி இராக்கை அவன் வசமே ஒப்படைக்கிறார்.
18 ஆம் நூற்றாண்டு, 17 ஆம் நூற்றாண்டில் இறுதியிலோ அல்லது 18 ஆம் நூற்றாண்டிலோ ஆரம்பத்தில் எழுதப்பட்ட இஸ்லாமியர்களின் தமிழ் இலக்கியங்கள்
*யாகூபு சித்தர் பாடல்
*முத்து மொழி மாலை
*திரு மக்காப்பள்ளு
ஆகியவை
யாகூபு சித்தர் படலை எழுதிய யாகூபு மதம் மாறிய தேவர் இனத்தை சேர்ந்த ராமத்தேவர் ஆவார் .அவர் மருத்துவ, மாந்திரீக வைத்திய முறைகளை விளக்கியுள்ளார் .அதில் வரும் பாரசீக அவர் அந்த காலகட்டத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்கிறது .
:முத்து மொழி மாலை எழுதியவர் பற்றி தெரியவில்லை. இதில் நபிகள் நாயகத்தின் புகழ் மற்றும் அவர் வாழ்க்கை சம்பவங்களை விவரித்துள்ளார். அதில் மற்ற இஸ்லாமியர்களின் அக்கால இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு குறைந்த அரபு சொற்களே உபயோகித்து காணப்படுகிறது. திரு மக்காப்பள்ளு. இதனுடைய ஆசிரியரும் அறியப்படவில்லை.இதில் தமிழ் பள்ளு பாணியில் எழுதப்படிருக்கிறது. இது மக்கா நகர் பற்றியும் நபிகள் நாயகம் பற்றியும் ,முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி என்ற ஞாநி பற்றியும் ,நாயகத்தின் வரலாறு சம்பத்தப்பட்ட விஷயங்கள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.
 
==19 ஆம் நூற்றாண்டு==
:19 ஆம் நூற்றாண்டில் மட்டும் இஸ்லாமியர்கள் 12 தமிழ் காப்பியங்களை படைத்துள்ளனர் .ஒரே நூற்றாண்டில் வேறு எந்த சமயத்தாரும் தமிழில் இத்தனை காப்பியங்கள் படைக்கவில்லை. {{சான்று தேவை}} புலவர் நாயகம் என்ற புலவர் மட்டும் 4 காப்பியங்களை படைத்துள்ளார்.
:தமிழில் அச்சு வடிவில் முதலில் வந்த காப்பியம், உமறுப்புலவர் எழுதிய [[சீறாப்புராணம்]] தான்.1842 இல் வெளிவந்தது. இதற்கு பிறகுதான் மற்ற தமிழ் காப்பியங்கள் அச்சில் வந்தன. தமிழில் முதல் நாவலாக பிரதாப முதலியார் சரித்திரம் 1879 இல் வந்தது. அதற்கு அடுத்து வந்த நாவல் ஈழத்து இஸ்லாமியர் சித்தி லெவ்வை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் 1885 இல் வெளிவந்தது .அதுதான் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் என்ற பெருமையோடு, தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவல் என்ற பெருமையும் பெற்றது.
:1869 இல் முதல் நாடக நூல் டம்பாச்சாரி விலாசம் அச்சில் வெளிவந்தது. இதற்கு அடுத்து அச்சில் வெளிவந்த தமிழ் நாடகம் வண்ணக்கலஞ்சியப்புலவர் என்ற முஸ்லிம் எழுதிய அலிபாதுஷா நாடகம் 1870 இல் வெளிவந்தது. மேலும் இஸ்லாமியர்கள் மகுடி நாடகம், நொண்டி நாடகம் போன்ற புதிய தமிழ் நாடக வடிவங்களை கொடுத்துள்ளனர். பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்ததாக கருதப்படும் முக்கூடல் பள்ளு எழுதியவர் என்னயினார் என்ற இஸ்லாமிய புலவராவார் .
 
:பிரபலமான விக்ரமாதித்தன் உரைநடை நூலாக இப்ராஹீம் ராவுத்தர் எழுதி உரைநடைக்கு சிறப்பு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு துறையிலும் தங்கள் பங்கில் முன்னோடிகளாக திகழ்ந்திருக்கிறார்கள். குலாம் காதிரு நாவலர், ஆங்கிலத்தில் ஜி.என்.எம் .ராய்நால்ட்ஸ் என்பவர் எழுதிய ஓமர் என்ற வரலாற்று நாவலை உமறு பாட்சா யுத்த சரித்திரம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1889 இல் இது நான்கு பாகங்களாக வெளிவந்தது. இவர் மேலும் மதுரை தமிழ் சங்கத்துப் புலவராற்றுப்படை என்ற ஆற்றுப்படை நூலை படைத்துள்ளார். இறைவனை அல்லது மன்னனை அடைவதற்கு எழுதியதை மாற்றி தமிழுக்கு ஆற்றுப்படுத்துகின்ற புதிய வழியைக்கட்டுகிறார்.
:தமிழில் எத்தனையோ சுய முன்னேற்ற நூற்கள் வந்துள்ளன .அதில் சிறந்து விளங்குகிற தமிழ்வாணன், எம். எஸ் உதய மூர்த்தி மற்றும் இன்றைய கால கட்டத்தில் சிறந்து விளங்குகின்ற எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் எம்.ஆர்.எம்அப்துல் ரஹீம் அவர்கள் .
 
== தமிழரிடையே இசுலாம் ==
 
தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து இங்கேயே தங்கினர். இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தை கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர். இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.
 
==தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்==
:முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர் நாகூரை சேர்ந்த சித்தி சுபைதா பேகம். 1938 இல் காதலா? கடமையா? என்ற நாவலைப் படைத்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து பாத்து முத்து சித்தீக், செய்புன்னிஷா, போன்ற முஸ்லிம் பெண்கள் தங்கள் எழுத்துப்பணியினை செய்திருக்கிறார்கள். பாத்து முத்து சித்தீக் நைல் நதிக்கரையில் என்ற பயண இலக்கியத்தை எழுதியுள்ளார். மேலும் கீழக்கரை செய்யது ஆசியா உம்மாள், தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளை அம்மாள், மைமூன் ஆகிய நான்கு பெண்பாற் புலவர்கள் சூபி ஞான இலக்கியங்கள் படைத்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியர் ஒரு இஸ்லாமிய பெண்ணாகும் .அவர் குடியிருந்த கோயில் என்ற படத்தில் குங்குமப்பொட்டின் மங்களம் என்ற படலை எழுதிய ரோசனாரா பேகம் ஆகும். 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அப்பாடல் இன்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் .
தற்கால முஸ்லிம் பெண் இலக்கியவாதிகளில் சல்மா மிக முக்கியமானவர் .இஸ்லாமியாப்பெண்களின் நம்பிக்கைகள் ,போராட்டங்கள் பற்றி அதிகம் எழுதுகிறார் .தமிழ் முஸ்லிம் சமுதாயத்தோடு ,தமிழ் முஸ்லிம் குடும்பங்களின் தொடர்புகள் பற்றி அவர் எழுதிய உணர்ச்சிப்பூர்வமான நாவல் 'இரண்டாம் ஜாமங்களின் கதை .அவர் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும் ',பச்சை தேவதை' போன்ற கவிதை ,சிறு கதை தொகுப்புகளை அளித்திருக்கிறார்.
 
==தமிழ் சினிமாவில்==
கண்ணதாசன் ,உடுமலை நாராயண கவி ,பாபநாசம் சிவன் போன்றோர் புகழ் பெற்ற காலத்தில் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவர் கவி கா .மு .ஷெரீப் அவர்கள் .அவர் எழுதிய ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே ,நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் ,வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ,சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா ,போன்ற பாடல்கள் இன்றும் பிரபலமான பழைய பாடல்கள் .இசை இணிமைக்காக மட்டுமல்ல இணிய பாடல் வரிகளுக்காகவும் அவை அதிகம் விரும்பப்படுபவை.
 
{{merge|தமிழில்==தற்கால இஸ்லாமியதமிழ் இலக்கியங்கள்}}==
தற்கால தமிழ் புதுக்கவிதை உலகில் இஸ்லாமியர்களின் பங்கு அபரிமிதமானது .முதலிடம் வகிப்பவர்களில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களும் ,மு .மேத்தா அவர்களும் ,இன்குலாப் (சாகுல் ஹமீது ),அபி ,மனுஷ்ய புத்திரன் ,கவிஞர் சல்மா ஆகியோர் முக்கியமானவர்கள் .கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் கவிதைக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழ் கவிஞர்.சாகித்ய அகாதமிவிருதினை பெற்ற மற்றொரு தமிழ் முஸ்லிம் தோப்பில் முகம்மது மீரான் நாவலுக்காக விருதினை பெற்றார்.
யுனெஸ்கோ கூரியர் என்ற அறிவியல் தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றியவரும் ,அறிவியல் தமிழ் கலைச் சொல்லாக்க முன்னோடியுமான மணவை முஸ்தபா அவர்களின் அறிவியல் தமிழுக்கு செய்த பணியை மறக்கமுடியாது .தேவநேயப்பாவாணர் ,பெருஞ்சித்திரனார் ஆகியோரோடு இணைந்து தனித்தமிழ் இயக்கத்தில் பாடுபட்டவர் காரை .இறையடியான் (முகம்மது அலி ).அவர் நடத்திய பூஞ்சோலை இதழ் சிறப்புமிக்கது.
ஈழத் தமிழர் முனைவர் .ம .மு .உவைஸ் அவர்கள் தலைமையில் முதன் முதலாக மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுத்துறை தொடங்கப்பட்டது. மறைந்த மௌலவி அப்துல் ஹமீது பாகவி அவர்கள் புனித குரான் சரீபை தமிழுக்கு மொழிபெயர்த்து தமிழுக்கும் ,இஸ்லாத்திற்கும் பெரும்பணி செய்திருக்கிறார்கள். அதேபோல் அவரது புதல்வர் AKA அப்துல் சமது அவர்களின் தமிழ் புலமை தமிழுலகம் அறிந்தது .அவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் .
 
==இசை தமிழ் இலக்கியங்கள்==
இசைக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு மிக்க தொன்மையானது .சிலர் கூறுவதுபோல் இசை இஸ்லாத்திற்கு எதிரி அல்ல . சபூர் வேதத்தை கீர்த்தனைகளாக தாவூத் நபி (ஸல் ) அவர்கள் பாடியபோது மெய் மறந்து போனார்கள் என்று சான்றுகள் கூறுகின்றன .இஸ்லாத்தின் மேல் பற்றுதலும் ,பிடிப்பும் கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய சக்கரவர்த்தி பாபர் ஓர் சிறந்த இசைவாணர் .ஏராளமான இசைப்பாடல்களையும் ,ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார் .தமிழ் முஸ்லிம்களும் இசைக்கும் ,இசை இலக்கியத்திற்கும் அளித்திருக்கும் பங்கு மிக உண்ணதமானது.தமிழில் பேரிலக்கியமா ? சிற்றிலக்கியமா ?அவற்றில் பண்கனிந்த பாடல்களை காணலாம் .இசை நூலா ?இசை நாடகமா ? கீர்த்தனா ?திருப்புகழா?கவடிச்சிந்தா ? எந்த வகையாய் இருந்தாலும் முஸ்லிம்கள் தொடாததில்லை .
வரகவி காசிம் புலவர் (1763 )திருப்புகழ் என்ற பெயரில் ஓர் அறிய இசைத் தமிழ் நூலை இயற்றியிருக்கிறார் .அவர்தம் பகரு முருவிலி அருவிலி வேருவிலி சிறுது மொரு தலை பயிலிலி துயிலிலி பருவி னுணவிலி துணையிலி இணையிலி
என்ற பாடல் சாந்த குழிப்புடன் ஒற்றெழுத்தே வராமல் எழுதியுள்ளார் .
குணங்குடி மஸ்தான் (1881 )தமிழர்க்குக் கிடைத்த மற்றொரு தாயுமானவர் .இவரது மாணவர்களாக பல இந்துக்களும் இருந்திருக்கின்றார்கள் .நாகூர் ஹனீபாவின் குரலில் ஒலிக்கும் திக்குத்திகண்டமும் கொண்டாடியே வந்து என்ற பாடல் குணங்குடி மஸ்தான் அவர்களால் எழுதப்பட்ட இனிமையான கண்ணிகளுக்கு சான்றாகும் .
குலாம் காதிர் நாவலர் (1882 )தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் படைத்த கருணாமிர்த சாகரம் போல 'இசை நுணுக்க இன்பம் 'என்ற இசையிலக்கண நூலை இயற்றியுள்ளார் .அவரது நாகூர்ப் புராணத்தில் பல இசை நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன .
முகம்மது நயினா மரைக்காயர் (1900 )இயற்றிய லால் கௌகர் நாடகம் ,குற்றால குறவஞ்சியை ஒத்தது .கௌகர் என்ற நங்கை பந்தாடியதை கூறும் பாடல் சங்கொலி பொங்கிய பங்கய மென்கை தளர்ந்துசி வந்தாடக் -குலப் பங்கில் உலாங்கயல் வென்றிடு வாள்விழி பாய்ந்துபு ரண்டாட
என்ற அழகிய சந்தத்தோடு நடை போடுகிறது .சாகுல் அமீது (1904 )அவர்கள் சங்கீத சிந்தாமணி என்ற இசை நுணுக்க நூலை இயற்றியளித்துள்ளார்.
 
அப்துல் காதிருப் புலவர் (1909 )சந்தத் திருப்புகழ் என்னும் அறிய இசைத்தமிழ் நூலை தந்துள்ளார் .அருணாகிரி நாதரின் திருப்புகழில் 384 சந்தங்கள் உள்ள விந்து புளகிதஎன்பதற்கு அதற்கடுத்தபடி ,காசிம் புலவரின் சந்தங்களைக் கொண்டுள்ள இளமை பறிபட என்ற பாடலே மிகப் பெரியது .
முருகன் மேல் பாடப்படும் காவடிச் சிந்தினால் கவரப்பட்ட இஸ்லாமியாப்புலவர்கள் அதுபோல் பாட விரும்பி பூவடிச் சிந்து பாடினார்கள்.நபிகள் நாயகம் (ஸல்),முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி,ஞானி மீரான் சாஹிப் ஆகிய இஸ்லாமிய பெரியார்களின் பூப்போன்ற திருவடிகளின் புகழ் பாடும் சிந்து எனபது அதன் பொருள் .
பிறமத தமிழ் இலக்கியங்களில் முஸ்லிம்கள் காயல் பட்டினத்தைச் சேர்ந்த சதாவதானி என்று பாராட்டுப்பெற்ற செய்குதம்பிப் பாவலர் ,சைவ சமய சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார் .இராமலிங்க அடிகளாரின் அருட்படல்களை மருட்பா என்று அதே சமயத்தைச் சார்ந்த கதிர்வேல் பிள்ளை பிரச்சாரம் செய்தபோது ,அது அருட்பா என்று வாதிட்டு வென்றவர் முஸ்லிமான பாவலர் அப்பா அவர்கள். இதேபோல் கம்பராமாயணச் சொற்பொழிவாற்றி 'கம்பராமாயண சாகிபு 'என்ற பெயர் பெற்றவர் பா.தாவூது ஷா .பெரியபுராணம் ,சிவபுராணம் குறித்து சொற்பொழிவு ஆற்றிஇருக்கிறார் கவி கா.மு.ஷெரீப்.
சென்னை கம்பன் கழகத்தில் நீண்டகால தலைவராக இருந்தவர் நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.கம்ப ராமாயணத்தில் சிறந்த பேச்சாளரும் ,ஆராய்ச்சியாளரும் ஆவார் .
சீவக சிந்தாமணி பற்றி முதன் முதலாக தொடர் சொற்பொழிவு ஆற்றியவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.
ஈழத்தமிழ் முஸ்லிம்கள்
ஈழத்தில் பல தமிழ் முஸ்லிம்கள் தங்கள் தாய்மொழியாம் தமிழுக்கு பல படைப்புகளையும் ,பணிகளையும் செய்திருக்கின்றனர் .தமிழில் இரண்டாவது நாவலான அசன்பே சரித்திரம் எழுதியவர் சித்தி லெப்பே என்ற ஈழத்தமிழர் ஆவார் .
ஜின்னா சரீபுதீன் என்பவர் முஸ்லிம் வீரர்களைப் பற்றிய காவியம் எழுதியுள்ளார் .
நிறைய ஈழத்து முஸ்லிம்கள் புதுக்கவிதைகளை அளித்துள்ளனர் .அவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் .MAM .நுஃமான் அவர்கள் .சிங்களவர் பகுதியிலும் தமிழ் மணப்பதற்கு காரணம் ஈழத்து தமிழ் முஸ்லிம்களாகும்.
முஸ்லிம்களின் தமிழ் இலக்கியப்பணி தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.இன்றுள்ள எல்லா ஊடகங்களிலும் அவர்களின் இலக்கியப்படைப்புகள் பாராட்டப்படுகின்றன . வலைப்பதிவுகளில் அவர்களின் ஆக்கம் தினம் நான் கண்டு வியந்துபோகிறேன் . கல்வி அதிகம் சென்றடையாத இந்த சமுதாயத்தில் அவர்களின் தாக்கங்களை தமிழ் இலக்கியத்தில் எங்கும் காண முடிகிறது.
 
== இலக்கியம் ==
* [[கண்ணகுமது மகதூம் முகம்மது]] - நூல் பதிப்பாளர், 70 நூல்களுக்கு மேல்
* [[தக்கலை பீர் முகமது அப்பா]]
 
== இவற்றையும் பாக்க ==
* [[இசுலாமிய தமிழ் இலக்கிய கழகம்]]
*
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041437.htm இசுலாமிய இலக்கியமும் கிறித்தவ இலக்கியமும்]
* [http://abedheen.wordpress.com/2008/11/24/tamilislamlit/ இஸ்லாமும் தமிழிலக்கியமும் முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்]
* [http://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20246l1.htm இசுலாமிய இலக்கியங்கள்]
* [http://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20246l5.htm பிற உரைநடை வகைகள்]
* [http://www.noolaham.net/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இசுலாமிய வரலாற்றுக் கதைகள்]
* [http://www.noolaham.net/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D சன்மார்க்க சட்ட விளக்கங்கள்]
 
== இவற்றையும் பாக்க ==
* [[இசுலாமிய தமிழ் இலக்கிய கழகம்]]
 
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:இசுலாமியத் தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்]]
54,735

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544983" இருந்து மீள்விக்கப்பட்டது