ஜி. எச். ஹார்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''ஜி.எச். ஹார்டி''' (''Godfrey Harold “G. H.” Hardy'') (பிறப்பு: [[பெப்ரவரி 7]], [[1877]]; இறப்பு: [[திசம்பர் 1]], [[1947]])<ref name="frs"/><ref>GRO Register of Deaths: DEC 1947 4a 204 Cambridge – Godfrey H. Hardy, aged 70</ref> என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.<ref name="mactutor">{{MacTutor Biography|id=Hardy}}</ref><ref name="mathgene">{{MathGenealogy |id=17806}}</ref>
இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாரரின் மன்னிப்பு" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணிதவியல் மேதையான ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்களுடன் நட்பு பூண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் அவரின் மிக சிறந்த கணித துறையில் அவரின் சிறந்த கண்டுபிடிப்பு என்ன என்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி ஸ்ரீநிவாச இராமானுஜம் என்று பதிலளித்தார்.
 
== வாழ்க்கை ==
ஜி.எச். ஹார்டி இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 இல் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை க்ராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார்.அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது இருந்தது.
பள்ளி கல்விக்கு பின்னர் ஹார்டி அவரது கணித திறனுக்காக வின்செஸ்டர் கல்லூரி சென்று கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. 1896 ல் அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார் இரண்டு ஆண்டு கல்விக்குப்பின் அவர் நான்காவது இடம் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் பயின்ற போது ஹார்டி "கேம்பிரிட்ஜ் அப்போஸ்தலர்கள்"என்று அழைக்கப்பட்ட அறிவார்ந்த இரகசிய குழுவில் ஒரு அங்கத்தினராக சேர்ந்தார்.
1900 ஆம் ஆண்டில் அவர் இரண்டாம் கட்ட பல்கலைகழக இறுதி தேர்வில் (ட்ரப்போஸ் II) தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றார்.
1903 ல் அவர் அந்த காலகட்டத்தில் ஆங்கில பல்கலைக்கழகங்களில் உயர்ந்த முதுகலை பட்டத்தை பெற்றார்.
1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.
இக்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவரின் வாழ்க்கை மற்றும் இராமானுசனுடனான அவரின் நட்பு முதலியவறை டேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு ''தி இந்தியன் கிளார்க் '' என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார்.
 
== கணித அழகியல் பற்றிய கட்டுரை==
 
"https://ta.wikipedia.org/wiki/ஜி._எச்._ஹார்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது