வை. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:தமிழர் using HotCat
சி adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB
வரிசை 30:
}}
 
'''சக்தி வை. கோவிந்தன்''' ஒரு தமிழ்நாட்டில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] பிறந்த இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். கோவிந்தன் 'சக்தி அச்சகம்' என்ற அச்சகத்தை நிறுவி, இதழ், மலர், பதிப்பகம் ஆகியவற்றை உருவாக்கியதால் 'சக்தி வை. கோவிந்தன்' என அழைக்கப்படுகிறார். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர் 'தமிழ் பதிப்புலகின் தந்தை' எனப் புகழப்படுகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றியவர்.
 
== இளமைக்காலம் ==
வரிசை 47:
[[படிமம்:சவைகோ6.jpg|thumb|250px|வலது|சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய ஆய்வு நூல்]]
 
மேலும் '''அணில்''', '''பாப்பா''', '''குழந்தைகள் செய்தி''' என்னும் குழந்தைகள் இதழ்களையும் '''மங்கை''' என்னும் பெண்களுக்காக மாத இதழையும் சிறுகதைகளை மட்டுமே கொண்ட '''கதைக்கடல்''' என்னும் மாத இதழையும் திரை இதழ் ஒன்றையும் நடத்தினார்.
 
அணில் இதழுக்கு [[தமிழ்வாணன்]] சிறிதுகாலம் ஆசிரியராக இருந்தார். மங்கை இதழுக்கு [[குகப்பிரியை]] ஆசிரியராக இருந்தார். குழந்தைகள் செய்தி இதழுக்கு கோவிந்தனே ஆசிரியராக இருந்தார்.
வரிசை 53:
== மாதம் ஒரு புத்தகம் ==
 
உலகப்போர் நேரத்தில் கிழமை இதழ், திங்கள் இதழ் ஆகியன போன்ற கால இதழ்களுக்கு தாள் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே திங்களுக்கு ஒரு தொகுப்பு நூல் என பல தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. அவ்வகையில் சக்தி வை. கோவிந்தனும் வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றைத் தொகுத்து '''சக்தி''' என்னும் பெயரில் திங்கள்தோறும் ஒரு '''தொகுப்பு நூலை''' ஒரு ரூபாய் விலையில் [[1930]]ஆம் ஆண்டு திசம்பர் முதல் வெளியிட்டார். இந்நூல் வரிசைக்கு [[தொ. மு. சி. ரகுநாதன்|தொ. மு. சி. ரகுநாதனும்]] [[கு. அழகிரிசாமி]]யும் பொறுப்பாசிரியர்களாக இருந்தனர். கோவிந்தன் பதிப்பாசிரியராக இருந்தார். இவ்வரிசையில் ஆணா? பெண்ணா?, தர்ம ரட்சகன், ஜீவப்பிரவாகம், திரிவேணி முதலிய 141 நூல்கள் வெளிவந்தன.
 
== பதிப்பகங்கள் ==
வரிசை 216:
==சான்றடைவு==
{{reflist}}
 
[[பகுப்பு:1912 பிறப்புகள்]]
[[பகுப்பு:1966 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வை._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது