ஹம்பிறி போகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
பின்னர் தனது சிறுவயது நண்பன் பில் பிராடி ஜூனியரிடம் நட்பினை புதுப்பித்தார். சீனியர் ப்ராடி திரைத்துறை தொடர்புகளோடு இருந்தார். அவர் வேர்ல்ட் பில்ம்ஸ் எனும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த பொழுது போகார்ட் அந்நிறுவனத்தில் ஒரு அலுவலக பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல் என பல்வேறு பணிகளை முயற்சித்தார். ஒன்றில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
 
ப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட். நடிகர்களின் நீண்ட பின்னிரவுகள் போகார்டுக்கு பிடித்திருந்தது. மேடையில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் கவனம் போகார்டுக்கு நிறையவே பிடித்திருந்தது. அவர் சொன்னார் "பிறவியிலேயே நான் ஒரு அசமந்தம், நடிப்பு தான் எனக்கு தகுந்த தொழில் என்று முடிவு செய்தேன்." தனது பெரும்பாலான நேரத்தை ஸ்பீக்ஈசிகளில்(ரகசிய மதுபானக் கடைகள்) செலவிட்டு ஒரு பெரும் குடிகாராக மாறிப்போனார். இந்த சந்தர்பத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரின் உதடு பிளவுபட்டிருக்க வேண்டும். இது மிக சரியாக லூயிஸ் ப்ரூக்ஸின் கருத்தை ஒத்திருக்கிறது.
 
போகார்ட் நடிப்பு என்பது ஒரு அகவுரமான தொழில் என்று கூறி வளர்க்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் மேடை நாடகங்களில் நடிப்பதை விரும்பினார். ஒருபோதும் நடிப்புக்கலையை முறையாக கற்றவர் இல்லை என்றாலும் சீராக தனது திறனை கூர்தீட்டிக்கொண்டே வந்தார். 1922 முதல் 1935 வரை பிராட்வே நிறுவனத்தின் குறைந்தது பதினேழு நாடகங்களில் நடித்திருந்தார்.
==திரைப்பட வாழ்க்கை==
அவரது முதல் படம் 'பெட்ரிஃபைடு ஃபாரஸ்ட்' 1936ல் வெளியானது.போகர்ட் 1942 இன் காஸபிளான்காவி்ல் 'ரிக் பிளெய்னெ' கதாபாத்திரத்தில் நடித்தார்.காஸாபிளான்கா 1943ல் சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்றது.இப்படம் அவரை ஸ்டுடியோ பட்டியலின் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுசென்றது மற்றும் அவரது அவரது ஆண்டு சம்பளம் [[$]] 4,60,000 மேல் சென்றதுடன் உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நடிகராக ஆக்கியது.
வரி 69 ⟶ 70:
 
தொடர்ந்து டு ஹாவ் அண்ட் ஹாவ் நாட்(1944);தி பிக் ஸ்லீப்(1946); டார்க் பாசேஜ்(1947) மற்றும் இவரது மனைவி லாரென் பாகல்லுடன் நடித்த தி டிரஷர் ஆப் தி சியரா மாடரே(1948); இந் எ லோன்லி பிளேஸ்(1950), தி ஆப்ரிகன் குவீன்(1951); இவர் பெற்ற ஒரே அகாடமி விருதினை இவருக்கு பெற்றுத்தந்த படம்;சாப்ரினா (1954). தி ஹார்டர் தே பால்(1956) இவரது கடைசிப் படம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு நீண்ட இவரது திரைவாழ்வில் இவர் எழுபத்தி ஐந்து படங்களில் நடித்திருந்தார்.
 
 
 
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹம்பிறி_போகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது