சலார் ஜங் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
அருங்காட்சியகம்
வரிசை 1:
'''சாலார்சங் அருங்காட்சியகம்''' (Salarjung Museum ) ஐதராபாத் பெரு நகரிலுள்ள மிகச் சிறப்பான ஒரு அருங்காட்சியகமாகும். மிர் யுசுப் அலி கான் (Mir Yusaf Ali Khan )மூன்றாவது சாலார் சங் (Salar Jung 111 ) ,நவப் மிர் ஓசுமான் அலிகான்( Nawab Mir Osman Ali Khan), ஏழாவது நிசாமின் முதன்மை அமைச்சராக 1899 முதல் 1949 வரையில் இருந்தார். இவர் ஒரு சிறந்த கலை இரசனையாளர். இவரது சொந்த முயற்சியினால் சேகரிக்கப்பட்ட கலைநயம் மிக்க பொருட்களே இவையாவும்.உலகில் இது போன்ற ஒரு சேகரிப்பு வேறு இல்லை எனக் கருதப்படுகிறது. மக்களைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இது விளங்குகிறது. முதலில் இவ்வருங் காட்சியகம் சாலார்சங் குடும்ப மாளிகையான திவான் டியோரி (Dewan Deorhi ) யில்தான் அமைக்கப்பட்டிருந்தது.1968 ல் தான் முசி(Musi ). ஆற்றின் தென்கரையிலுள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது . இந்திய நாட்டிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்ட 43,000 அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன. ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.இந்திய,மத்திய கிழக்கு, நேப்பாளம், திபேத்து, மியன்மார்,தூரகிழக்கு மற்றும் யுரோப்பிய கலைப் பொருட்களும் சிறுவர் பகுதியும் உள்ளன.பார்க்க வேண்டிய பல கலைப் பொருட்களுள்ளன.
[[படிமம்:Hyderabadmuseum.jpg|thumb|200px|சலார் ஜங் அருங்காட்சியகம்]]
'''சலார் ஜங் அருங்காட்சியகம்''' [[இந்தியா]]வின் தென்மாநிலங்களில் ஒன்றான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] தலைநகரான [[ஐதராபாத்]]தில் மூசி ஆற்றின் தென்கரையில் உள்ள தார் உல் சிஃபாவில் அமைந்துள்ளது. இது ஒரு கலைப் பொருட்களுக்கான [[அருங்காட்சியகம்]] ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.
 
==வரலாறு==
ஐதராபாத்தின் ஏழாவது நிசாமின் பிரதம அமைச்சரான [[மூன்றாம் நவாப் மிர் யூசுஃப் அலி கான் சலார் ஜங்]] (1889-1949) தனது வருமானத்தில் குறிப்பிடத் தக்க அளவைச் செலவு செய்ததுடன் 35 ஆண்டுகள் முயன்று இந்த அரும் பொருட்களைச் சேகரித்தார். அவரது முன்னோரது மாளிகையான திவான் தேவ்டியில் அவர் விட்டுச்சென்ற இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி முதலில் அந்த மாளிகையிலேயே ஒரு தனியார் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை 1951 ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு]] திறந்து வைத்தார். சலார் ஜங் சேகரித்த பொருட்களில், இப்போது இருப்பது பாதியளவே எனப் பலர் கருதுகிறார்கள். இவர் மணம் செய்து கொள்ளாது தனியே வாழ்ந்ததால் இப் பொருட்களின் பாதுகாப்புக்கு அவர் தனது அலுவலர்களையே நம்பியிருந்தார். ஆனால் அவர்கள் அவற்றில் பலவற்றை எடுத்துக் கொண்டு போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சில பொருட்கள், திவான் தேவ்டியில் இருந்து பொருட்களை இப்போதுள்ள கட்டிடத்துக்கு மாற்றும் போது தொலைந்தோ களவுபோயோ விட்டதாகத் தெரிகிறது. இந்த அருங்காட்சியகம் 1968 ஆம் ஆண்டில் இப்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. இது 1961 ஆம் ஆண்டின் [[சலார் ஜங் அருங்காட்சியகச் சட்டம், 1961|சலார் ஜங் அருங்காட்சியகச் சட்டத்தின்]] கீழ், ஆந்திரப் பிரதேசத்தின் [[ஆளுனர்|ஆளுனரைப்]] பதவிவழித் தலைவராகக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்]]
 
Indian map service -Hydrabad
==வெளியிணைப்புகள்==
* [http://www.salarjungmuseum.in/home.asp சலார் ஜங் அருங்காட்சியக இணையத் தளம்]
 
[[பகுப்பு:இந்திய அருங்காட்சியகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சலார்_ஜங்_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது