"திரையரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,010 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==வடிவமைப்பு==
மரபுவழியாக ஒரு திரையரங்கு, ஒரு [[நாடக அரங்கு|நாடக அரங்கைப்]] போலவே வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளைக் கொண்ட ஒரு பார்வையாளர் மண்டபத்தைக் கொண்டிருக்கும். இதுவே ஒரு திரையரங்கின் முக்கியமான பகுதி. திரையரங்கக் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நுழைவுக் கூடம் இருக்கும். திரைப்படம் பார்க்க வரும் மக்களையும், படம் முடிந்து வெளியேறும் மக்களையும் கொள்ளத்தக்கதான இடவசதியை இது கொண்டிருக்கும். பார்வையாளர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் இடமும் பெரும்பாலும் இந்த நுழைவுக் கூடத்திலேயே இருக்கும். இதைவிடச் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் போன்றவை விற்பதற்கான இடம், ஆண்களுக்கும் பெண்பளுக்குமான தனித்தனிக் கழுவறைகளும் நுழைவுக்கூடப் பகுதியிலேயே அமைந்திருக்கும்.
 
பார்வையாளர் மண்டபத்தின் ஒரு பக்கத்தில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு பெரிய திரை இருக்கும். இதற்கு எதிர்ப்புறச் சுவருக்குப் பின்புறத்தில் உயரத்தில், படமெறி கருவிகளுக்கான அறை இருக்கும். சுவரில் உருவாக்கப்படும் சிறிய துவாரங்களூடாக படமெறிகருவிகளில் இருந்து படம் திரையில் விழுமாறு காண்பிக்கப்படும்.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1551742" இருந்து மீள்விக்கப்பட்டது