"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும்.இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது.இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்மே காரணம்.
 
திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி(Projector),அச்சுப்பொறி(Printer),புகைப்படக்கருவி(Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும்.இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதர்ர்கள் ஆவர்.உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும்.ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832),ஜோட்ரோப்(1834),பிராக்ஸினோ ஸ்கோப்(1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.
 
 
==முதல் இயக்கத்திரைப்படம்==
 
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார்.இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்பட சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார்.1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும்.தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1551901" இருந்து மீள்விக்கப்பட்டது