"பேடா வெங்கட ராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,510 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==மூன்றாம் ஸ்ரீரங்காவின் கிளர்ச்சி==
அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த அவனது மருமகனான ஸ்ரீரங்கா ஏதோ காரணத்தால் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 1638 ஆம் ஆண்டின் [[பீஜப்பூர்|பீஜப்பூரில்]] இருந்து படையெடுப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தான். பீஜப்பூர்-மூன்றாம் வேங்கடன்ஸ்ரீரங்கா கூட்டுப் படைகள் முதலில் பெங்களூரைத் தாக்கின. அப்போது அரசன் பெருமளவு விட்டுக்கொடுப்புக்களுடன் சமாதானம் செய்துகொண்டான். எனினும் அதே கூட்டணி மீண்டும் தாக்குதலைத் தொடங்கி வேலூர்க் கோட்டைக்கு 12 மைல் தூரம் வரை வந்துவிட்டன. எனினும், அரசன் நாயக்கர்களின் துணையுடன் கூட்டுப் படையின் முகாம்களைத் தாக்கினான்.
 
==கோல்கொண்டாப் படைகள்==
அடுத்த ஆண்டில் (1641), கோல்கொண்டா சுல்தான் விஜயநகரத்தின் குழப்பநிலையைச் சாதகமாக்கிக் கொண்டு கிழக்குக் கரையூடாகப் பெரும் படையை அனுப்பினான். கோல்கொண்டாப் படைகள் மதராசுக்கு அருகே, மூன்றாம் வேங்கடனின் படைகள், செஞ்சி நாயக்கன், [[மதராஸ்]], [[பூனமலை]]த் தலைவனான [[தர்மால வேங்கடபதி]] ஆகியோரின் துணையுடன் நடத்திய தாக்குதல்களை முறியடித்து வேலூர்க் கோட்டையை நோக்கி முன்னேறின. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய மூன்றாம் வேங்கடன் [[சித்தூர்]]க் காட்டுப் பகுதிக்குப் பின்வாங்கினான். அங்கே 1642 ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானான்.
 
மூன்றாம் வேங்கடனுக்கு மகன்கள் இல்லை. இதனால், பீஜப்பூர் முகாமை விட்டுவிட்டு வேலூருக்கு வந்த [[மூன்றாம் ஸ்ரீரங்கா]] அரசனானான்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/155198" இருந்து மீள்விக்கப்பட்டது