விருபாட்ச ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
'''விருபக்ஷ ராயன்''' (கி.பி. 1404-1405) சங்கம மரபைச் சேர்ந்த, விஜயநகரப் பேரரசர்களில் ஒருவனாவான். பேரரசனாக இருந்த [[இரண்டாம் ஹரிஹரன்]] இறந்த பின்னர், [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரத்தின்]] அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான [[முதலாம் தேவ ராயன்]], [[இரண்டாம் புக்கா ராயன்]], விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை. சில மாதங்களிலேயே அவன் கொலை செய்யப்பட்டான்.
 
விருபக்ஷ ராயனின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதானதால், அவனது ஆட்சி பற்றிச் சொல்லுவதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால், இவன் காலத்தில், [[கோவா (மாநிலம்)|கோவா]], [[சாவுல்]] (Chaul), [[டாபோல்]] (Dabhol) உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாகப் பயணி [[பெர்னாவோ நூனிஸ்]] (Fernao Nuniz) குறிப்பிட்டுள்ளார். மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் நூனிஸ் எழுதியுள்ளார்.
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/விருபாட்ச_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது