வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
பலூன் தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் [[நிலைத்த இறக்கை வானூர்தி]]கள் அறிமுகமான பின்னர், 1910ல் யூ. எசு. எசு. ''பிர்மிங்காம்'' என்ற [[அமெரிக்கக் கடற்படை]]க் கப்பலில் இருந்து சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் [[கடல் வானூர்தி]] பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் [[வேந்திய சப்பானியக் கடற்படை]]யின் ''வாகாமியா'' என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து [[பாரந்தூக்கி]] மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வாகும்.
[[File:USS Lexington.jpg|right|thumb|250px|யூ.எசு.எசு.''லெக்சிங்க்டன்'' (1928-42)]]
தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் [[எச். எம். எசு]] ''ஆர்கசு'', மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, [[எச். எம். எசு]] ''ஏர்மசு'', ''ஓசோ'', [[லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்]]கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய [[வாஷிங்க்டன் கடல் உடன்பாடு]] வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.
 
[[File:AkagiDeckApril42.jpg|left|thumb|250px|வேந்திய சப்பானியக் கடற்படை வானூர்தி தாங்கி ''அகாகி'']]
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது