"வ. வே. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==லண்டனில் அரசியல் போராட்டம்==
பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த ''அபிநவபாரத்'' சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. [[பிபின் சந்திர பால்]], லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் [[பாரதியார்சுப்பிரமணிய பாரதி|பாரதியாரி]]ன் [[இந்தியா (இதழ்)|இந்தியா]] பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.
 
அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.
* ''குளத்தங்கரை அரசமரம்'' என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
* இவரது ''மங்கையர்க்கரசியின் காதல்'' என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
* [[1921]]-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், ''கம்பராமாயண ஆராய்ச்சி'' (''KAMBARAMAYANA -A STUDY'') எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் [[1950]] இலேயே நூலாக வெளிவந்தது. [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], இலத்தீன், [[பிரெஞ்சு]], ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் [[1990]] இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
* கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
* ''கம்ப நிலையம்'' என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
19,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554470" இருந்து மீள்விக்கப்பட்டது