நகர்ப்புறவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,712 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''நகரியம்''' (Urbanism) என்பது, நக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
'''நகரியம்''' (Urbanism) என்பது, நகர்ப்புற மக்கள் [[கட்டிடச் சூழல்|கட்டிடச் சூழலுடன்]] கொண்டுள்ள சிறப்பியல்பான தொடர்பாடலைக் குறிக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இது, நகர்ப்புற வாழ்வோடு சிறப்பாகப் பிணைந்துள்ள மனநிலை, வழக்காறுகள், மரபுகள், மனப்போக்குகள், உணர்வுகள் போன்றவை ஆகும். நகரங்களின் [[புவியியல்]], [[பொருளாதாரம்|பொருளாதார]], சமூக, [[பண்பாடு|பண்பாட்டு]] வெளிப்பாடுகளையும், கட்டிடச் சூழல் மீது இவை அனைத்தினதும் ஒன்றிணைந்த தாக்கங்களையும் உட்படுத்தி நகரங்களை ஆய்வு செய்யும் துறையாகவும் இது உள்ளது.
 
==கோட்பாடு==
தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகரியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகரியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]], [[தொலைத்தொடர்பு]] வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் [[லூயிசு வர்த்]] (Louis Wirth) என்பவர் கூறுகிறார்.
 
[[பகுப்பு:நகர்ப்புறம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554614" இருந்து மீள்விக்கப்பட்டது