"சூழலியல் நகர்ப்புறவியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,951 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சூழலியல் நகரியம்''' (ecological urbanism) என்பது, [[சூழலியல்|சூழலியலின்]] அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு [[நகரியம்]] ஆகும். இது [[நகர வடிவமைப்பு]], [[நகரத் திட்டமிடல்]] ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் [[காலநிலையியல்]], [[நீரியல்]], [[புவியியல்]], [[உளவியல்]], [[வரலாறு]], [[கலை]] போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது. இது, [[பசுமை நகரியம்]], [[தாங்குவளர்ச்சி நகரியம்]] போன்ற நகரிய வகைகளிலும் பார்க்கக் குறைந்த அளவான கருத்தியல் அடிப்படையில் இயங்குகிறது. சூழலியல் நகரியம் பல வழிகளிலும் [[நிலத்தோற்ற நகரியம்|நிலத்தோற்ற நகரியத்தில்]] இருந்து வளர்ச்சியடைந்தது என்பதுடன் அதனை விமர்சிப்பதாகவும் உள்ளது. இது நகர வடிவமைப்பிலும் அதன் மேலாண்மையிலும் முழுதளாவிய அணுகுமுறை ஒன்றின் தேவையை வலியுறுத்துகிறது.
 
"சூழலியல் நகரியம்" என்பதற்கு ஈடான "ecourbanismo" (எக்கோஏர்பனிஸ்மோ) என்னும் சொல் கட்டிடக்கலைஞ்ரான மிகுவேல் ருவானோ () என்பவர் எழுதிய எசுப்பானிய மொழி நூலொன்றில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2003 ஆம் ஆண்டில் ஒரிகோன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் இதற்கிணையான Ecological urbanism (எக்கோலாஜிக்கல் ஏர்பனிசம்) என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்பட்டது.
 
[[பகுப்பு:நகரியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554936" இருந்து மீள்விக்கப்பட்டது