லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
=விட்கென்ஸ்டைனின் படக்கோட்பாடு ( Picture Theory )=
 
விட்கென்ஸ்டைனின் பிரதானமான கருத்துக்களில் ஒன்று படக்கோட்டுக் கருத்தாகும், "எடுப்பு என்பது சூழ்நிலையின் படமாகும்" ஒரு சூழ்நிலையை அப்படம் விபரிக்கின்றது. ஒரு எடுப்பை புரிந்துகொள்வதற்கு அது விபரிக்கும் சூழ்நிலையை விளங்கிக்கொள்ள வேண்டும். " ஒரு எடுப்பு யதார்த்தத்தின் படமாகும்" என விட்கென்ஸ்டைன் கூறினார். மேலும் அவர் " நான் ஒரு எடுப்பை புரிந்து கொள்கிறேன் என்றால், அது பிரதிநிதித்துவப்படுத்தும் சூழ்நிலையை அறிந்து கொள்கிறேன்" என்றார். விட்கென்ஸ்டைன் படம் எனும்போது சாதாரண நிலையிலுள்ள, நமது கண்கள் காணுகின்ற படங்களை குறிப்பிடவில்லை. விட்கென்ஸ்டைன் கூற முனைவது அந்நிகழ்ச்சியைப் பற்றிய அளவையியல் ரீதியான படத்தையாகும் (Logical picture of the fact). சில நேரங்களில் விட்கென்ஸ்டைன் எடுப்புக்களை படமெனவும், ஒரு சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வுகளாகவும் கருதினார்.
 
மூலஎடுப்புக்களை பெயர்களின் தொடர்ச்சியாக அவர் கருதவில்லை. ஒரு எடுப்பின் அடையாளம் ஏதாவதொன்றை பிரதிநிதித்துவப்படுத்துதல் என்பதாகவே இருக்க முடியும். ஒரு நேர்வினால்தான் அர்த்தத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகைப் பெயர்களால் அர்த்தத்தை வெளியிட முடியாது. "ஒரு எடுப்பு படமாக இருக்கும் வரையில்தான் ஏதாவதொன்றைக் கூறும்". அது படமாக இருக்கும்போது மட்டுமே உறுதியானது. ஒரு எடுப்பு ஒரு சூழ்நிலையை எம்மொடு தொடர்பு படுத்துகின்றது. அதாவது அந்த சூழ்நிலையின் அளவையியல் படத்தை எமக்குத் தருகிறது.
 
=மெய்யியல் விசாரணை (Philosophical Investigations) பிந்திய விட்கென்ஸ்டைன்=
1918ல் விட்கென்ஸ்டைனின் Tractatus எழுதப்பட்டது. 1921ல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. Tractatus எழுதி முடிக்கப்பட்டபோது கடினமான பிரச்சினைக்கு இறுதியானதும், திட்டவட்டமானதுமான தீர்வை முன்வைத்துள்ளதாகவும், மேலும் அது எக்காலத்திற்கும் பொருத்தமானது எனவும் விட்கென்ஸ்டைன் கருதினார். ஆனால் மெய்யியல் விசாரணை (Philosophical Investigations) எழுதிய வேளையில் அது அவரின் மேற்குறித்த கருத்துக்களிலிருந்து விலகியது. Philosophical Investigations என்ற நூல் அவரின் Tractatus இன் முரண் தொகுப்பாகக் காணப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது