"ஹம்பிறி போகார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,063 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
ப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட். நடிகர்களின் நீண்ட பின்னிரவுகள் போகார்டுக்கு பிடித்திருந்தது. மேடையில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் கவனம் போகார்டுக்கு நிறையவே பிடித்திருந்தது. அவர் சொன்னார் "பிறவியிலேயே நான் ஒரு அசமந்தம், நடிப்பு தான் எனக்கு தகுந்த தொழில் என்று முடிவு செய்தேன்." தனது பெரும்பாலான நேரத்தை ஸ்பீக்ஈசிகளில்(ரகசிய மதுபானக் கடைகள்) செலவிட்டு ஒரு பெரும் குடிகாராக மாறிப்போனார். இந்த சந்தர்பத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரின் உதடு பிளவுபட்டிருக்க வேண்டும். இது மிக சரியாக லூயிஸ் ப்ரூக்ஸின் கருத்தை ஒத்திருக்கிறது.
 
போகார்ட் நடிப்பு என்பது ஒரு அகவுரமான தொழில் என்று கூறி வளர்க்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் மேடை நாடகங்களில் நடிப்பதை விரும்பினார். ஒருபோதும் நடிப்புக்கலையை முறையாக கற்றவர் இல்லை என்றாலும் விடாமுயற்சியுடன் சீராக தனது திறனை கூர்தீட்டிக்கொண்டே வந்தார். 1922 முதல் 1935 வரை பிராட்வே நிறுவனத்தின் குறைந்தது பதினேழு நாடகங்களில் நடித்திருந்தார். சிறுவனாகவோ இரண்டாம்கட்ட காதலராகவோ வரவேற்பறை நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். இவர்தான் முதன் முதலாக டென்னிஸா யாராவது ? என்கிற வார்த்தையை மேடையில் கேட்டது. அலெக்சாண்டர் உல்கோட் போகார்டின் ஆரம்பகால பணிகளை பார்த்துவிட்டு "வழக்கமாக கருணையோடு குறிப்பிடப்படும் பற்றாக்குறை" என்று எழுதினார். சில விமர்சனங்கள் கருணையோடு இருந்தன. போகர்ட் ஆரம்ப காலத்தில் தனக்கு வாய்த்த துக்கடா வேடங்களை வெறுத்தார். அவற்றை வெள்ளை பான்ட் வில்லி பாத்திரங்கள் என்று அழைத்தார். லின் ஸ்டார்லிங் எழுதிய மீட் தி வைப் என்கிற நாடகத்தில் பதின்ம வயது பத்திரிகையாளர் கிரிகோரி பிரவுனாக நடித்தார் போகார்ட். இந்நாடகம் நவம்பர் 26, 1923 முதல் ஜூலை 1924 வரை 232 முறை கிளா அரங்கில் வெற்றிகரமாக மேடையேறியது.
 
இவரது ஆரம்பகால தொழில் பயணத்தில் ட்ரிப்டிங் என்கிற நாடகத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இது ப்ளே ஹவுஸ் அரங்கில் நடந்துகொண்டிருந்தது. இந்த தருணத்தில்தான் நடிகை ஹெலன் மென்கனை சந்தித்தார். மே 20, 1926ஆம் ஆண்டு நியுயார்க்கின் கிரேமெர்சி பார்க் ஹோட்டலில் அவரை மணந்தார் போகார்ட். நவம்பர் 18, 1927ஆம் ஆண்டு ஹெலனை விவாகரத்து செய்தார். அவர்கள் நண்பர்களாக தொடர்ந்தார்கள். ஏப்ரல் 3, 1928ஆம் ஆண்டு அவர் மேரி பிலிப்சை அவரது அன்னையின் ஹார்ட்போர்ட், கன்னக்டிகட் அடுக்குமாடி குடியிருப்பில் மணந்தார். போகார்டின் பிற மனைவிகளைப் போல மேரியும் ஒரு நடிகை. மேரிக்கு முன் கோபம் அதிகம். நெர்வ்ஸ் என்கிற நாடகத்தில் நடிக்கும் பொழுதுதான் போகார்ட் இவரைப் பார்த்தார். நெர்வ்ஸ் நகைச்சுவை அரங்கில் 1924 செப்டெம்பர் மாதம் குறுகிய காலம் ஓடியது.
 
1929ஆம் ஆண்டு பங்கு சந்தை வீழ்ச்சிக்கு பின் நாடகங்கள் தயாரிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்தது. அவற்றில் நடித்த புகைப்படத் தகுதியோடு இருந்த பல நடிகர்கள் ஹாலிவுட் பக்கம் நகரத் துவங்கினர். 1928ல் இரண்டு சுருள்கள் மட்டுமே கொண்ட தி டான்சிங் டவுன் என்கிற படத்தில் ஹெலன் ஹெய்சுடன் நடித்தார் போகார்ட். மேலும் ஜோன் ப்லண்டால், ருத் எட்டிங் போன்ற நடிகைகளுடன் ஒரு சிறிய விட்டாபோன் படமான பிராட்வேஸ் லைக் தட் நடித்தார். 1930ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் 1963ஆம் ஆண்டு மீண்டும் கண்டறியப்பட்டது.
 
==திரைப்பட வாழ்க்கை==
100

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1556017" இருந்து மீள்விக்கப்பட்டது