வாடகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
'''வாடகை''' என்பது, ஒருவர் இன்னொருவருக்குச் சொந்தமான [[சொத்து|சொத்தையோ]], பொருளையோ தற்காலிகமாகக் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் [[கூலி]] ஆகும். தற்காலத்தில் பலவகையான பொருட்களும், சொத்துக்களும் வாடகைக்கு விடப்படுகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான [[கட்டிடம்|கட்டிடங்கள்]], வசிப்பதற்கான [[வீடு (கட்டிடம்)|வீடு]]கள் முதல், [[அலுவலகச் சாதனங்கள்]], [[வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்|வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்]], வண்டிகள், [[உடை]]கள், [[அணிகலன்]]கள் போன்றவைவரை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
பொதுவாக, ஒரு சொத்தையோ பொருளையோ [[பணம்]] கொடுத்துச் சொந்தமாக வாங்குவதற்குத் தேவையான பண வசதி இல்லாதவர்கள் அவற்றை வாடகைக்கு எடுப்பது வழக்கம். எனினும், பண வசதி இருந்தாலும், குறித்த பொருளுக்கான நீண்டகாலத் தேவைகள் இல்லாதவிடத்து, குறுகிய காலத்துக்கு மட்டும் அவற்றை வாடகைக்கு எடுப்பதும் வழக்கம்.
"https://ta.wikipedia.org/wiki/வாடகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது