குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==பிறப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை==
 
இவர் ஒன்பதாவது சீக்கிய குருவான இவர் ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர் இந்தியாவின் [[பீகார்|பீகாரில்]] [[பாட்னா|பாட்னாவில்]] பிறந்தவர். [[1675]] முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். [[முகலாயப் பேரரசு|மொகாலயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்பு பகுதிகளில் தொங்கவிடப்பட்டார்<ref>முனைவர் பெ.சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்,பக்கம் 161</ref>. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார்.
 
இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார். 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவைகளுக்கான இடங்களையும் நிறுவினார்.
 
==மதத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்==
 
சீக்கியர்களை எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயமாக மாற்றினார். அவ்வமைப்பிற்கு '''கல்ச''' (தூய்மை) என்று பெயர் சூட்டினார்.இவ்வமைப்பில் சேருபவரை '''அகாலி''' என்று அழைத்தார்.அகாலி என்பதற்கு '''இறவாதவன்''' என்று பொருள்.கடவுளின் சார்புள்வானாக பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார்.
 
”1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்” எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/குரு_கோவிந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது