"இராமகிருஷ்ணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
=== தட்சினேஸ்வரத்தில் ===
ராமகிருஷ்ணர் பதினேழு வயதை அடைந்தபோது அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. அப்போது அவர் அண்ணன் ராம்குமார் [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] சில வீடுகளிலும், கல்கத்தா அருகிலிருந்த [[தட்சினேஸ்வர் காளி கோயில்|தட்சினேஸ்வர் காளி கோயிலிலும்]] புரோகிதராக வேலை பார்த்து வந்தார். அவருடன் சென்று தங்கி பணியாற்றுவதற்காக ராமகிருஷ்ணர் கல்கத்தா சென்றார். ராம்குமார் இறந்தவுடன் ராமகிருஷ்ணர், [[காளி]] கோயிலின் பூசாரியானார். காளி கோயிலின் ஒரு மூலையில் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
 
தட்சினேஸ்வர் காளி கோயில் பவதாரினிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ராமகிருஷ்ணருக்கு தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
19,901

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557756" இருந்து மீள்விக்கப்பட்டது