யாழ்ப்பாண வைபவமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 6:
இந் நூல் ஆரம்பத்தில் [[இராமாயணம்|இராமாயண]]த்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டுப் பின் [[மகாவம்சம்|மகாவம்ச]]த்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜய ராஜனின் கதையையும், அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதைகூறிப் பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப்பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதைகூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகிறது. [[இலங்கை]]யின் மேற்குக்கரையிலுள்ள [[திருக்கேதீஸ்வரம்|திருக்கேதீஸ்வரத்தின்]] புனரமைப்பு, கிழக்குக்கரையிலுள்ள [[திருக்கோணேஸ்வரம்]], தெற்கிலுள்ள சந்திரசேகரன் கோயில் மற்றும் வடகரையிலுள்ள திருத் தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜய ராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே [[ஈழத்து வன்னியர்|வன்னியர்]]களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது.
 
யாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்திலேற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து, [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] அழைத்துவரப்பட்டமை, [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூர்]] இராஜதானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மேலும் [[தமிழர்]]களின் குடியேற்றம்,
என்பவற்றை விபரிக்கும் இந்நூல், தொடர்ந்து இந் நாட்டையாண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரந் தருகிறது. [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துக்கீசரிடம்]] யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_வைபவமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது