ரொஜர் பெடரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
[[படிமம்:Federer Beijing 2008.jpg|thumb|left|125px|2008 ஒலிம்பிக் போட்டியில் பெடரர், இங்கே இவர் இரட்டையரில் தங்கம் வென்றார்]]
2008-ஆம் வருடம் [[ரோஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரர்]] ஒரே ஒரு [[கிராண்ட் ஸ்லாம்]] கோப்பையை மட்டுமே கைப்பற்றினார். அது [[யூ.எசு. ஓப்பன்]] போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரேவை 6-2,7-5,6-2 என்ற தொகுப்பு கணக்கில் தோற்கடித்து வென்றார். இவ்வாண்டு [[பிரெஞ்சு ஓப்பன்]] மற்றும் [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன்]] போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் ரபேல் நடாலிடம் முறையே 6-1,6-3,6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் 6-4,6-4,6-7(5),6-7(8),9-7 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். [[ஆஸ்திரேலிய ஒப்பன்|ஆத்திரேலிய ஓப்பன்]] அரை இறுதி ஆட்டத்தில் நோவாக் சோகொவிச்சிடம் வீழ்ந்தார். மேலும் இரண்டு ஏடிபி-1000 இறுதி ஆட்டங்களில் நடாலிடம் தோல்வியுற்றார். ஆயினும் இரண்டு ஏடிபி-250 கோப்பைகளை (எசுட்டோரில், ஃகேல்) கைப்பற்றினார். ஒரு ஏடிபி-500 கோப்பையை [[பேசல்]] போட்டியில் கைப்பற்றினார். இவ்வருடம் நடைபெற்ற [[ஒலிம்பிக்]] போட்டியில் சக நாட்டவரான தனிசுலாசு வாவ்ரின்காவுடன் இணண சேர்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 
2009-ஆம் வருடம் ரோஜெர் பெடரர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளைக் கைப்பற்றினார். பிரெஞ்சு ஒப்பன் இறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கை 6–1, 7–6(1), 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 5–7, 7–6(6), 7–6(5), 3–6, 16–14 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து கோப்பைகளைக் கைப்பற்றினார். மேலும் ஆஸ்திரேலிய ஒப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 7–5, 3–6, 7–6(3), 3–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூ.எஸ். ஒப்பன் இறுதிப் போட்டியில் டெல் போட்றோவிடம் 3–6, 7–6(5), 4–6, 7–6(4), 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். மற்றும் இரண்டு கோப்பைகளையும் இவ்வருடம் பெடரர் கைப்பற்றினார். மாட்ரிட் மாஸ்டர்ஸ்(களிமண் ஆடுகளம்) இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை 6–4, 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ்(கடின ஆடுகளம்) இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 6–1, 7–5 என்ற தொகுப்புக் கணக்கிலும் வெற்றிகொண்டு கோப்பைகளைக் கைப்பற்றினார். இருப்பினும் பேசல் கோப்பையில் ஜோகொவிச்சிடம் 6–4, 4–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ரொஜர்_பெடரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது