"பால் செசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பாரிஸில் செசான், கமிலெ பிச்சாரோவை சந்தித்தார். அவர்களின் முதல் உறவு 1860களின் இடையில் துவங்கியது அப்போது அது குரு மற்றும் சீடர் எனும் உறவுமுறையாகவே இருந்தது ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் கூட்டாக இணைந்து பணி செய்தனர்.
செசானின் ஆரம்ப படைப்புகள் இயற்கை நிலக்காட்சியில் ஒரு உருவம் இருப்பது போன்றதாகவே இருந்தது; பின்னர் அவர் நேரடியான விடயங்களை கவனித்து அதை மெல்லிய பாணியில் வரையலானார். அவர் நேரடியாக பார்ப்பதை அப்படியே அதே வண்ணத்துடன் இயற்கையாக காட்சியளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர், ''என்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும்.'' என்றார்.
[[File:Cézanne, Paul - Still Life with a Curtain.jpg|thumb|செசானின் சித்திரம்]]
 
செசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைப்பெற்றது ஆனால் அவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. 1864ல் இருந்து 1869 வரை அவர்கள் செசானின் படைப்புகளை நிராகரித்து வந்தனர் ஆனால் செசான் 1882 வரை தன் படைப்புகளை சமர்பித்த வண்ணம் இருந்தார். அதே வருடம் சக ஓவியரான ஆன்டோய்னி கைல்லெமெட்டின் வேண்டுகோளுக்கு இண்ங்க செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே அவரின் வெற்றிகரமான முதலும், கடைசியுமான ஓவிய சமர்ப்பிப்பு ஆகும்.
 
 
== ஓவியங்களின் காட்சி வரிசை ==
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1560791" இருந்து மீள்விக்கப்பட்டது