"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,300 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மேற்கோள்)
'''இயற்கைத் தேர்வு''' என்பது [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொறுத்து ஒரு [[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மற்றும் [[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல [[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.
 
எல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் [[மரபணு]]த் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த [[சந்ததி]]களூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு [[உயிரினம்]] தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் [[உயிரணு]]க்களின் [[மூலக்கூற்று உயிரியல்]], ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும். இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும்.
 
இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும். இயற்கைத் தேர்வு (Natural selection) என்ற சொற்பதம் முதன் முதலில் [[சார்ல்ஸ் டார்வின்|சார்ல்ஸ் டார்வினால்]] அவர் 1859 இல் எழுதிய [[உயிரினங்களின் தோற்றம் (நூல்)|உயிரினங்களின் தோற்றம்]] (On the Origin of Species) என்ற நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=origin>Darwin C (1859) ''[[On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life]]'' John Murray, London; modern reprint {{cite book|author = Charles Darwin, Julian Huxley|year = 2003|title = On The Origin of Species| publisher = Signet Classics|isbn = 0-451-52906-5}} Published online at [http://darwin-online.org.uk/ The complete work of Charles Darwin online]: [http://darwin-online.org.uk/content/frameset?itemID=F373&viewtype=side&pageseq=2 On the origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life].</ref>
 
==முக்கிய நியமங்கள்==
 
மேற்கூறிய நிகழ்விலிருந்து '''தக்கன பிழைத்தல்''' என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'பிழைத்தல்' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக ஒரு உயிரினம் ஏனையவற்றைவிடக் குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதன் மரபணுப் பரம்பலின் அளவு அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அந்த உயிரினம், தனது பிரத்தியேகமான இயல்பின் காரணமாக மிக அதிகளவில் உருவாக்கப்படும்.
 
==இயற்கை தேர்வு மூலம் பரிணாமம்==
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1561278" இருந்து மீள்விக்கப்பட்டது