தி அமேசிங் இசுபைடர்-மேன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
 
'''தி அமேசிங் ஸ்பைடர் - மேன்''' மார்வெல் ஸ்பைடர் அமைக்கப்பட்டுள்ள 2012 அமெரிக்க சூப்பர்ஹீரோ படம். நாயகன் கதாபாத்திரம் அடிப்படையாக கொண்டது. ஸ்பைடர் - மேன் திரைப்படம் தொடர் ஒரு புதிய தொடக்கமாக இருக்கிறது.
இதில் பீட்டர் பார்க்கர் பாத்திரத்தினை ஏற்றிருப்பவர் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட். இது பழைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல் கதை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது.
 
==கதை சுருக்கம்==
ஸ்பைடர் மேனின் அம்மாவும், அப்பாவும் 'ஆஸ்கார்ப்' எனும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு விமான விபத்தில் இறக்க நேரிடுகிறது. அதனால் மாமா, அத்தையுடன் வசித்து வரும் அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார். வழக்கம் போல் காமிராவுடன் சுற்றி தனது காதலியை அவருக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுக்கிறார். அப்பாவி மாணவனை மற்றொருவனிடம் இருந்து காப்பாற்ற அடி வாங்கும்போது பரிதாபப்படவும், அப்போது க்வென் ஸ்டேஸி தானாக வந்து காப்பாற்றியபின் இருவருக்கும் நடக்கும் உரையாடலின்போது ரசிக்கவும் வைக்கிறார் தன் நடிப்பால்.
 
வீட்டை ஒரு நாள் சுத்தம் செய்யும்போது தனது தந்தை பயன்படுத்திய பையைப் பார்க்கிறார். அதைப் பார்த்தவுடன் சிறு வயது ஞாபகம் மனதில் மின்னி மறைகிறது. அதை தனது அறைக்கு எடுத்து வந்து ஆராய்கிறார். ஒரு புகைப்படமும், ஆஸ்கார்ப் நிறுவனத்தின் முக்கிய கோப்புகளும் கிடைக்கின்றன. அது அவ்வளவும் தனது தந்தையின் கண்டுபிடிப்பு என தெரிய வருகிறது.
 
புகைப்படத்தில் உள்ள தனது தந்தையின் நண்பர் டாக்டர் கர்ட் கான்னர்ஸ், தற்போது ஆஸ்கார்ப் நிறுவனத்தில் வேலை செய்வதை இண்டர்நெட் வழியாக அறிகிறார். அங்கு சென்று ரகசிய இடத்தைப் பார்க்கப் போகும்போது ஒரு சிலந்தி கடித்து விடுகிறது. சிலந்தி கடித்ததால் சுவற்றில் ஏறும் சக்தியும், உடல் வலிமையும் கிடைக்கிறது.
 
டாக்டருடன் மெதுவாக நட்பை ஏற்படுத்தியபின் அவரது ஆரய்ச்சிக்குப் பயன்படும் ஃபார்முலாவை தன் தந்தையின் பையில் இருந்து எடுத்துத் தருகிறார். வெட்டுப்படும் பல்லியின் உடல் உறுப்பு மீண்டும் வளர்வதைப் போல, அந்த நிறுவனம் பிற உயிரினங்களின் உடல் உறுப்பையும் வளர வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக ஹீரோவும், டாக்டரும் எலியின் மீது அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அது வெற்றியும் அடைகிறது.
 
நிறுவனத்தின் வற்புறுத்தல் காரணமாக டாக்டர் தனது உடம்பில் செலுத்துகிறார். அவருக்கும் கை வளர்கிறது. ஆனால், அந்த மருந்து இவரை ராட்சஸப் பல்லியாக மாற்றுகிறது. அட்டகாசம் செய்கிறார்.
 
தன்னால்தான் இந்த பிரச்சினை உருவானது; அதைத் தானே சரி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பார்க்கர் செயல்படுகிறார். இதற்கு அவரது காதலியும் உதவுகிறாள். முடிவு வழக்கம்போல்தான்! பார்க்கர் வெற்றி அடைகிறார்.
 
==படத்தின் +==
* முந்தைய படங்களில் காட்டப்படாத கோணத்தில் ஸ்பைடர்மேன் காட்டப்படுகிறார்.
* கிராபிக்ஸ் காட்சிகள் அருமை.
* தமிழ் வசனம் கவனத்தினை ஈர்க்கிறது.
* 3டி தொழில் நுட்பம் வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
==References==