சூப்பர் போல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாகையாளர் பட்டியல்
Adding Refs (edited with ProveIt)
வரிசை 5:
இப்போட்டியும் தொடர்பான கொண்டாட்டங்களும் சேர்ந்து ''சூப்பர் போல் ஞாயிறு'' (Super Bowl Sunday) என்று அழைக்கப்பட்டன. 111 மில்லியன் நேயர்கள் கண்டுகளித்த 2011ஆம் சூப்பர் போல் ஆட்டம், அதிக அமெரிக்கர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இதற்கு முன் இந்த சாதனை முந்தைய ஆண்டின் சூப்பர் போல் ஆட்டம் பெற்றிருந்தது. மேலும் சூப்பர் போல் ஆட்டமே உலகில் அனேக தொலைக்காட்சி நேயர்களால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.
 
இதன் மிக அதிகமான தொலைக்காட்சி நேயர்களின் காரணமாக இப்போட்டியின் போது ஒளிபரப்பப்படும் [[விளம்பரம்|விளம்பரங்களுக்கு]] கட்டணம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்நிகழ்வில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் இவற்றிற்கென சிறப்பு விளம்பரங்களை மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பர். பல நிறுவனங்களின் சிறந்த விளம்பரங்கள் இந்நிகழ்ச்சியின் போதே முதலில் ஒளிபரப்பப்படும். இத்தகைய சூப்பர் போல் விளம்பரங்களை காண்பதும் அவற்றை விமர்சிப்பதும் சூப்பர் போலின் முக்கிய அங்கமாகிவிட்டது.<ref>{{cite web | url=http://pqasb.pqarchiver.com/floridatoday/access/1813188961.html?FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jan+28%2C+2004&author=Carl+Kotala&pub=Florida+Today&desc=Commercials+as+big+as+game&pqatl=google | title=Commercials as big as game | accessdate=5 திசம்பர் 2013}}</ref> மேலும் போட்டியின் அரைப்பகுதி இடைவேளையில் பிரபலமான கலைஞர்களின் கலை நிகழ்ச்சியின் நடைபெறும்.
 
==உருவாக்கம்==
வரிசை 63:
==தொலைக்காட்சியில் சூப்பர் போல்==
 
உலகில் அதிக நேயர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் வருடாந்திர விளையாட்டு நிகழ்வுகளில் சூப்பர் போல் இரண்டாமிடத்தில் உள்ளது. [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] மட்டுமே இதனை விட அதிக நேயர்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.statista.com/statistics/216526/super-bowl-us-tv-viewership/ | title=அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மதிப்பீடு | accessdate=5 திசம்பர் 2013}}</ref> சராசரியாக போட்டியின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் அமெரிக்காவில் 80 முதல் 90 மில்லியன் மக்கள் போட்டியை தொலைக்காட்சியில் காண்பர் என நீல்சன் தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் போட்டிக்கு முன் என்.எஃப்.எல் வெளியிடும் செய்திக் குறிப்பில், அந்த ஆண்டின் நிகழ்வை 200 நாடுகளில் உள்ள 1 பில்லியன் மக்கள் பார்க்கக்கூடும் என தெரிவிக்கப்படும்.<ref>{{cite web | url=http://www.nfl.com/news/story/09000d5d80022760/article/super-bowl-xli-broadcast-in-232-countries | title=என்.எஃப்.எல் செய்திக் குறிப்பு | accessdate=5 திசம்பர் 2013}}</ref> இவ்வெண்ணிக்கைகள் எவ்வளவு மக்களால் இந்நிகழ்வை தொலைக்காட்சி வாயிலாக பார்க்க வாய்ப்புள்ளது என்பதே அன்றி எவ்வளவு மக்கள் உண்மையாக பார்த்தனர் என்பதல்ல. எனினும் பல்வேறு ஊடகங்கள் இத்தகைய செய்தியை தவறாகவே புரிந்துகொள்கின்றனர்.<ref>{{cite web | url=http://sportsillustrated.cnn.com/2006/writers/steve_rushin/02/03/rushin0206/ஃ | title=A billion people can be wrong | accessdate=5 திசம்பர் 2013}}</ref> 2012ஆம் ஆண்டின் சூப்பர் போல் XLVI 111 மில்லியன் அமெரிக்க மக்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்தது.<ref>{{cite web | url=http://fangsbites.com/2012/02/super-bowl-xlvi-breaks-total-viewership-record/ | title=Super Bowl XLVI Viewership record | accessdate=5 திசம்பர் 2013}}</ref> 1982ஆம் ஆண்டின் சூப்பர் போல் XVI அப்போது தொலைக்காட்சி வைத்திருந்த 49 சதவிகித வீடுகளில் பார்க்கப்பட்டது. <ref>{{cite web | url=http://web.archive.org/web/20080513153855/http://history.sandiego.edu/gen/recording/tv-toprated.html | title=Television's top rated Programme | publisher=Nielsen | accessdate=5 திசம்பர் 2013}}</ref>
 
அமெரிக்காவில் அதிக நேயர்களால் பார்க்கப்பட்ட 10 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் நான்கு சூப்பர் போல் போட்டிகள் உள்ளன. 2012ஆம் ஆண்டின் சூப்பர் போலின் போது முப்பது நொடிகளுக்கான விளம்பர இடம் 3.5 [[அமெரிக்க டாலர்]]களுக்கு விற்கப்பட்டது<ref>{{cite web | url=http://espn.go.com/new-york/nfl/story/_/id/7544243/super-bowl-2012-commercials-cost-average-35m | title=Super Bowl 2012 commercials cost average $3.5 million | accessdate=5 திசம்பர் 2013}}</ref>. தற்போது இந்நிகழ்வின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சி.பி.எஸ்., ஃபாக்ஸ், என்.பி.சி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் 2014ஆம் ஆண்டின் சூப்பர் போலை ஃபாக்ஸ் தொலைக்காட்சி குழுமம் ஒளிபரப்பும்.
 
<references/>
 
{{sports-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சூப்பர்_போல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது