சோவியத்–ஆப்கான் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
==சோவியத் படையமர்த்தல்==
 
[[File:BMD-1 in Afganistan.JPG|250px|left|thumb|காபூல் நகரில் வலம் வரும் சோவியத் பீரங்கி படை]]
கிழர்ச்சிக் குழுவினருக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கத்தொடங்கியதை அடுத்து, 1978ல் ஆப்கானிய அரசுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இதன்படி அவசர காலங்களில் ஆப்கன் அரசு கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் தனது படைகளை அனுப்ப சோவியத் ஒன்றியம் ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், அமீனின் ஆட்சியின் மீதும் சோவியத் ஒன்றியம் அதிருப்தி கொண்டிருந்தது. அவரின் ஆட்சி ஆப்கனில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும் என அது அச்சம் கொண்டது. முன்னதாக அதன் இரகசிய உளவு நிறுவனமான [[கேஜிபி]]யும், பிரதமர் நூர் முகம்மது தரக்கி கொலை செய்யப்பட்டதற்கு அமீனை குற்றம்சாட்டி தனது கடுமையான ஆட்சேபங்களை அரசுக்கு தெரிவித்திருந்தது. எனவே இதைப் பற்றி விசாரிக்க ஒரு உயர்மட்ட ஆணையத்தை சோவியத் ஒன்றியம் அமைத்தது. இதில் கேஜிபியின் தலைவர் யூரி அந்ரோபோவ், அதன் மத்தியக் கமிட்டி உறுப்பினர் போரிசு போனோமாரவ், பாதுகாப்பு அமைச்சர் திமித்ரி உதினோவ் ஆகியோரும் அடக்கம். 1978 ஏப்ரல் இறுதியில் தனது அறிக்கையை வெளியிட்ட இந்த ஆணையம், பிரதமர் அமீன் தனக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்வதாகவும்., அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படுபவர்களின் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவாலர்களும் அடக்கம் எனவும் குற்றம்சாட்டியது. மேலும் அமீன் சோவியத் ஒன்றியத்தை விடவும் பாக்கித்தான் மற்றும் [[சீனா]]வுடம் அதிக அனுதாபம் காட்டுவதாகவும், அமெரிக்க உளவாளிகளுடன் இரகசிய சந்திப்புகள் நடத்துவதாகவும், ஆகக்கூடியதாக அவர் ஒரு [[நடுவண் ஒற்று முகமை|சிஐஏ]] உளவாளியாகவும் இருக்கலாம் எனவும் தனது சந்தேகத்தை தெரிவித்திருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்–ஆப்கான்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது