"சோவியத்–ஆப்கான் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

229 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(→‎சவூர் புரட்சி: *எழுத்துப்பிழை திருத்தம்*)
போர் ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே, ஆப்கனின் 20% நிலப்பரப்பை சோவியத் படைகள் பிடித்துவிட்ட போதிலும் மீதம் இருந்த 80% இடங்கள் பல்வேறு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. குறிப்பாக வடகிழக்கு மாகனங்களில் கிளர்ச்சியாலர்களின் கையே ஓங்கி இருந்தது. மேற்கு ஆப்கானிய பகுதிகள் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், அங்கு [[ஈரான்|ஈரானிய]] புரட்சிக் குழுக்கள் ஊடுருவும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் அதையும் கண்கானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சோவியத் படைகள் தள்ளப்பட்டன. மேலும் சோவியத் படைகளின் நேரடித் தாக்குதல்கலை சமாளிக்க முடியாத கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் [[கரந்தடிப் போர்]] முறையில் இறங்கின. ஆப்கனின் இயற்கையான குன்றுகளும் மலைகளும் நிறைந்த நில அமைப்பு கிளர்ச்சிக்குழுவினருக்கு மிகவும் சாதகமாக அமைந்தன. அதே நேரத்தில், சரியான சாலை வசதிகள் இல்லாத இந்த குன்றுகளை அடைய முடியாமல் சோவியத் பீரங்கிப் படைகளும் தடுமாறின. இது குறிப்பிடத்தக்க அளவு கிளர்ச்சியாளர்களுக்கு வெற்றியை பெற்று தந்தன.
[[File:Mujahideen prayer in Shultan Valley Kunar, 1987.jpg|thumb|left|250px|பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் முகாசிதீன் வீரர்கள்]]
குறிப்பாக பஞ்சிர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து கிளர்ச்சிக் குழுக்களை விரட்ட, 1980 முதல் 1985 வரை மொத்தம் ஒன்பது முறை சோவியத் படைகள் போரிட்டன. இந்த தாக்குதல்களில் அதிக அளவிலான விமானங்களும், போர் வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இவற்றில் சோவியத் படைகள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்ற போதும், அதைத் தக்க வைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை வீழ்த்தப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் கிளர்ச்சியாலர்கள் குழு பள்ளத்தாக்கு பகுதியை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன. மேலும் பாக்கித்தான் எல்லைப் பகுதிகளில் இருந்த அனேக நகரங்களும், பாதுகாப்பு படைகளின் சோதனைச் சாவடிகளும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகின. ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சோவியத் படைகளுக்கு ஆதரவு இருந்த போதிலும், தொடர்ந்த காலங்களில் பெருவாரியானவர்கள் கிளர்ச்சிக்குழுக்களில் இனையத் தொடங்கினர். மேலும் ஆப்கன் இராணுவத்தில் இருந்த சில வீரர்களும் கூட சோவியத் படைகளுக்கு எதிராக செயல்படத்தொடங்கினர். இது சோவியத் இராணுவத்துக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்தது.
 
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566660" இருந்து மீள்விக்கப்பட்டது