அன்னி பெசண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
 
== பிரும்மஞான சங்கம் ==
''The Secret Doctrine'' என்ற நூலை எழுதிய [[பிளேவட்ஸ்கி அம்மையார்|பிளேவட்ஸ்கி அம்மையாரை]] [[பாரிஸ்|பாரிசில்]] [[1889]] ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் [[பிரும்மஞானபிரம்மஞானம் சங்கம்|பிரும்மஞான சங்காத்தில்]] உறுப்பினரானார். இதனை அடுத்து [[மார்க்சியம்|மார்க்சிய]]வாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். [[1891]] இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து [[பிரும்மஞானம்பிரம்மஞானம்|பிரும்மஞான]]த்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் [[1893]] ஆம் ஆண்டில் [[சிகாகோ]]வில் இடம்பெற்ற [[உலக கொலம்பிய கண்காட்சி]]யில் கலந்து கொண்டார்.
 
1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.
 
[[படிமம்:Annie Besant plaque.JPG|thumb|right|1874 லண்டனில் (Colby Road, London SE19) அன்னி பெசண்ட் வாழ்ந்த வீடு]]
 
== இந்தியாவில் அன்னி பெசண்ட் ==
இந்தியா வந்த அன்னி பெசண்ட், [[சென்னை]]யில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். [[இந்து]] சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். [[பகவத் கீதை]]யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [[காசி]]யில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.
"https://ta.wikipedia.org/wiki/அன்னி_பெசண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது