ஆர்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Delaunay-Windows.jpg|thumb|260px|ராபர்ட் டிலூனே, ''Simultaneous Windows on the City'', 1912, [[Hamburger Kunsthalle]]]]
'''ஆர்பியம்''' (''orphism'') அல்லது '''ஆர்பியக் கியூபிசம்''' (''Orphic Cubism'') என்பது, [[கியூபிசம்|கியூபிசத்தில்]] இருந்து கிளைத்த ஒரு கலை இயக்கம். [[ஓவியம்|ஓவியங்களில்]] தூய பண்பியல் தன்மையையும், பிரகாசமான [[நிறம்|நிறங்களையும்]] பயன்படுத்திய இவ்வியக்கத்தினர், [[பால் சிக்னாக்]], [[சார்லசு என்றி]], சாய வேதியியலாளரான [[யூசென் செவ்ரோல்]] போன்றோரின் கோட்பாட்டு எழுத்துக்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். இந்த இயக்கம், கியூபிசத்துக்கும், [[பண்பியல் ஓவியம்|பண்பியல் ஓவியத்துக்கும்]] இடையிலான ஒரு மாறுநிலைக் கட்டமாகவே பார்க்கப்படுகிறது.<ref>[http://www.tate.org.uk/collections/glossary/definition.jsp?entryId=210 Tate Glossary] retrieved February 12, 2010</ref> கியூபிசத்தில் ஒற்றைவண்ண ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தில் நிறங்களைப் பயன்படுத்தி ''ஆர்பிய'' இயக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தோர், [[பிரான்டிசேக் குப்கா]], [[ராபர்ட் டிலூனே]], [[சோனியா டிலூனே]] என்போராவர்.
 
பிரான்சுக் கவிஞரான [[கியோம் அப்பொலினயர்]] (Guillaume Apollinaire) என்பவரே ''ஆர்பியம்'' என்னும் பெயரை 1912 ஆம் ஆண்டில் முதன் முதலில் பயன்படுத்தினார். கிரேக்கக் பாடகரும், கவிஞருமான [[ஆர்பியசு]] என்பாரின் பெயரைத் தழுவியே இவ்வியக்கத்துக்குப் பெயர் உருவானதாகத் தெரிகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த ஓவியர்கள் தமது படைப்புக்களில் ஆர்பியசின் உணர்ச்சிப் பாடல் தன்மைகளைப் புகுத்த முயற்சிப்பதை இப்பெயர் கருத்தில் கொள்வதாகத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது