நாகசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==தோற்றம்==
 
நாதஸ்வரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் [[வங்கியம்]] என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்பு படுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது [[புல்லாங்குழல்]] போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துண இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
 
வரி 19 ⟶ 20:
உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 [[அடி]].
 
நாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும்.இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர். நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். இது ஒரு வகை [[நாணல்]] என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த [[நாணல்|நாணலைக்]] ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து பக்குவப்படுத்துவர். இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
 
====ஒத்து====
 
நாதசுரத்திற்கு [[சுருதி]] கருவியாக விளங்குவது ''ஒத்து'' என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக [[சுருதிப்பெட்டி]] பயன்படுத்தப்படுகின்றது.
 
====பெரியமேளம்====
 
நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது [[தவில்]] (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் ''பெரியமேளம்'' என அழைப்பர்<ref name="Percussioner International Audio Magazine">{{cite book|title=Percussioner International Audio Magazine|url=http://books.google.com/books?id=BskJAQAAMAAJ|accessdate=25 December 2012|year=1984|publisher=Sal Sofia Industries, Inc.|page=38}}</ref><ref name="Percussioner International Audio Magazine">{{cite book|title=Percussioner International Audio Magazine|url=http://books.google.com/books?id=BskJAQAAMAAJ|accessdate=25 December 2012|year=1984|publisher=Sal Sofia Industries, Inc.|page=38}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/நாகசுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது