"நாதசுவரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Nadaswaram.jpg|right|frame|நாதசுவரம்]]
'''நாதசுவரம்''' என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]]யாகும். இது '''நாதஸ்வரம்நாதசுவரம்''', '''நாதசுரம்''', '''நாகசுரம்''', '''நாகஸ்வரம்'''. '''நாயனம்''' என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் [[தென்னிந்தியா]], [[இலங்கை]] போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த [[இசைக்கருவி]] வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது<ref>{{cite news|title=Reality show India's Got Talent - Khoj 2 winners to sing for Obama|url=http://indiatoday.intoday.in/story/reality-show-indias-got-talent--khoj-2-winners-to-sing-for-obama/1/118399.html|accessdate=9 January 2012|newspaper=[[India Today]]|date=31 October 2010}}</ref>.
 
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால்., பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
 
==தோற்றம்==
 
நாதஸ்வரம்நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் [[வங்கியம்]] என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்பு படுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது [[புல்லாங்குழல்]] போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துண இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
 
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[பாதசங்கிரகம்]] என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.
 
==பயன்பாடு==
நாதஸ்வரம்நாதசுவரம் மங்கல இசைக்கருவியாக பயன்படுகிறது.கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும்.நாதஸ்வரங்கள் உட்புற நிகழ்ச்சிகளை விட திறந்த வெளிகளிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றதாகும்.ஏனெனில் இவற்றின் இசை பெருக்கும் திறன் அதிகமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1567922" இருந்து மீள்விக்கப்பட்டது