கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
== கண்டுபிடிப்பு ==
[[1896]] ஆம் ஆண்டில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[அறிவியல்|அறிவியலாளர்]] [[ஹென்றி பேக்குரல்]] என்பவர் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். சில [[யுரேனியம்|யுரேனிய]] உப்புக்களை ஓர் ஒளிப்படத்தட்டின் மீது வைத்து, அத்தட்டு [[கறுப்பு]]க் காகிதத்தினால் சுற்றி ஓர் இருட்டு அறையில் வைக்கப்பட்டது. இத்தட்டு உருமாற்றப்பட்ட போது (''develop'') அது பாதிக்கப்படிருந்ததை அவதானித்தார். இதே சோதனையை வெவ்வேறு யுரேனிய உப்புக்கள் கொண்டு செய்த ஆய்வின் போது யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப்ப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்
[[File:Deflection of nuclear radiation in a magnetic field en.svg|thumbnail|right|250 px]]
[[படிமம்:Radioactivity-1.jpg|thumbnail]]
 
இயற்கையிலேயே அணுஎண் 92 உம் அதற்கு மேலுமுள்ள தனிமங்கள் கதிரியக்கம் கொண்டுள்ளன. எந்த வித புறத் தூண்டுதலுமின்றி தாமாக இது நிகழ்கிறது. அதிக வெப்பநிலையோ குறைந்த வெப்பநிலையோ, எப்படிப்பட்ட காந்த, மின் புலங்களாலும் கதிரியக்க நிகழ்வு பாதிக்கப்படுவதில்லை. கதிரியக்கத்தின் போது α,β,γ என மூன்று விதமான கதிர்கள் வெளிப்படுகின்றன. α கதிர்கள் ஈலியத்தின் கருக்களே என்றும் β கதிர்கள் எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் என்றும் γ கதிர்கள் மின்னூட்டம் ஏதுமில்லா மின்காந்த அலைகள் என்றும் அறியப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது