உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரைவிலக்கணம்: *விரிவாக்கம்*
→‎வரைவிலக்கணம்: *விரிவாக்கம்*
வரிசை 9:
உயிரியல் வகைப்பாட்டுக்கு வரைவிலக்கணம் கொடுத்தவர் [[எர்ணஸ்ட் மாயர்]] ஆவார்<ref name="Mayr_Bock_2002">{{Cite journal |author=[[எர்ணஸ்ட் மாயர்|Ernst W. Mayr]] |last2=Bock |first2=W.J. |year=2002 |title=Classifications and other ordering systems |journal=J. Zool. Syst. Evol. Research |volume=40 |issue=4 |pages=169–94 |doi=10.1046/j.1439-0469.2002.00211.x |lastauthoramp=yes |ref=harv }}</ref>. அவரால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகுப்பிற்குள் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகுப்புக்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது". (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் "வகுப்பு" என்ற பதம் வகைப்பாட்டியலின் ஒரு படிநிலையான வகுப்பு என்பதைக் குறிக்கவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ளவும். இங்கு வகுப்பு என்பது ஒரு குழுவைக் குறிக்கின்றது).
 
அண்மித்த ஒரு பொதுவான [[மூதாதை]]யருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, ஒத்தவமைப்பு (homologous), அதாவது, ஒரு பொது மூதாதையிலிருந்து [[பரம்பரை]]யாகப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன<ref>{{Harvnb|Mayr|Bock|2002|p=178}}</ref>. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய அமைப்பு, அல்லது செயலொத்த (analogous) இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ.கா. பறவையும், வவ்வாலும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அது ஒரே மூதாதையிலிருந்து பாரம்பரியமாகக் பெறப்படாத ஒரு இயல்பாக இருப்பதனால், அவற்றை ஒரே வகுப்பிற்குள் அடக்குவதில்லை. அதேவேளை வவ்வாலும், திமிங்கிலமும் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் பாலூட்டிகள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
== தற்கால வளர்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது